மாபெரும் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு-2017


எம்.ஜே.எம்.சஜீத்-

கில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் 2017 ம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட நிகழ்வாக இலங்கையில் உள்ள தலை சிறந்த உலமாக்களைக் கொண்டு இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு எதிர் வரும் 2017.02.11 ஆம் திகதி அஸர் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளி வாசலில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இம்மாநாட்டில் காரணம் தெரியாத, இதுவரை கேள்விப்படாத பெயர்களில் நோய்கள் .இதற்கு காரணம் என்ன? என்பது பற்றியும் நாம் சாப்பிடும் சாப்பாடா? அல்லது நாம் நோய்க்கு நிவாரணியாக பாவிக்கும் மாத்திரைகளா? அல்லது நாம் பழக்கமாக ஆக்கியுள்ள எம் பழக்க வழக்கங்களா? அல்லது நோய்
ஏற்பட்டுவிட்டால் அதற்கு நிவாரணியாக நாம் எதை பாவிக்க வேண்டும்? நோய்களுக்கு நிவாரணியாக அல்குர்ஆனும்,ஸூன்னாவும் எதைக் குறிப்பிடுகின்றன? ஸஹாபாக்கள் தமக்கு ஏற்பட்ட நோய்களுக்கு நிவாரணியாக எதை பயன்படுத்தினார்கள் என்பன பற்றி தெளிவான விளக்கம் கொடுக்கப்படவுள்ளதால் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறார்கள்.


விசேட குறிப்பு :-
பெண்களுக்கு பிரத்தியேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -