தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாய் மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு.




எம்.எம்.ஜபீர்-

தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை அமைச்சின் 20 மில்லியன் ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் டாக்டர் சுசந்த குணசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக ஐ.எல்.எம்.மாஹிர், ஏ.எல்.தவம், ஆரிப் சும்சுதீன், டி.டி.மெத்தன் டி சில்வா, மஞ்சுளா பெர்னாண்டோ, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், வைத்தியர்கள், தாதியர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உடற்பயிற்சி பிரிவு, எண்டோஸ்கோபி பிரிவு, சீ.எஸ்.எஸ்.டி பிரிவு, ஸ்கேனர் இயந்திரம், கார்டியாக் மானிட்டர், பல் சிகிச்சை, மருத்துவ ஆய்வு கூடம், ஊசிகளை பம்ப் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களும் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -