“உரசிப் பார்க்காதவரை எல்லோரும் சுத்தமான 24 கரட் தங்கம்தான்“

ன்றைக்கு சமூகத்தில் இருக்கும் பலரது மிகப் பெரிய உளவியல் நோயாகவிருப்பது தங்களது வேலைவெட்டிகளை எல்லாம் விட்டு விட்டு அடுத்தவர்களின் குறைகளை துருவி துருவி ஆராய்ந்து ஆனந்தமடைந்து அதனை தாங்கள் செய்த சாதனையாக கருதி பிறரோடு பகிர்ந்து கொள்வதுதான்.

சமீப காலமாக சமூக வலையத்தளங்களான முகநுால், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற அனைத்திலும் சில அறிவீனர்கள் பிறரது மான-மரியாதை விடயத்தில் பகிரங்கமாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள், தங்களால் கேள்விப்படும் விடயங்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களின் விபரங்களையும், போட்டோக்களையும் பகிரங்கமாக முகநுாலில் வெளியிட்டு ஆனந்தமடைகின்றார்கள், இதில் சில குடும்பப் பெண்களது புகைப்படங்களையும் வெளியிட்டு அப் பெண்களின் மான-மரியாதைகளில் இரக்கமின்றி, இறைவனைப் பயந்து கொள்ளாது பகிரங்கமாக விளையாடுகின்றார்கள். 

இந்தப் பெண் இவனோடு ஓடிவிட்டாள், அந்தப் பெண் அவனோடு ஓடிவிட்டாள், காதலன்-காதலி அந்தரங்கம், கணவன்-மனைவி அந்தரங்கம் என இவர்கள் அசிங்கப்படுத்தும் விடயம் ஏராளம்.

சம்பவம் நடைபெற்ற களத்தில் இவர்கள் இருந்திருக்க மாட்டார்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களை இவர்கள் ஒரு போதும் அறிந்திருக்க மாட்டார்கள், பார்த்திருக்கக் கூட மாட்டார்கள், அடிப்படைப் பிரச்சினை என்னவென்று இவர்கள் துளி அளவும் அறிந்திருக்க மாட்டார்கள் ஆனால் எங்கோ ஓரிடத்தில் இருந்து அத்தனையையும் நேரில் கண்டவர்கள் போல் ஆதாரமின்றி முகநுால் வழியாக பிறரை மானபங்கப்படுத்துகின்றார்கள். இப்படியானவர்கள் தயவு செய்து இறைவனைப் பயந்து இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

குற்றம் பிடிப்போரும், அக்குற்றங்களை பகிரங்கப்படுத்துவோரும் சமூகத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்கள் விடயத்தில் குறைபிடிப்பதையும், அவர்களது பலயீனங்களை அம்பலப்படுத்துவதையும் மிக உற்சாகமாக செய்து கொண்டு வருகின்றார்கள். 

ஒரு சாதாரண மனிதன் முதல் கொண்டு ஒரு குழுவின் தலைவரோ, கட்சியின் தலைவரோ, அமைப்பின் தலைவரோ மறைமுகமாக அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் பிறரை வழிநடத்தவும், பிறர் அவர்கள் பால் வழிநடாத்தப்படவும் தகுதியானவர்களா என்பது பரிசீலனை செய்யப்பட வேண்டிய தொன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. 

அதே போல் யாரும் யார் மீதும் தகுந்த ஆதாரங்கள் இல்லாது கேள்விப்படுவதை எல்லாம் வைத்து சேறு பூசவும் கூடாது, இவைகள் பெரும் பாவங்களாகும்.

தாம் பிறரை குறை பிடிப்பதற்கு முன்னர், தாம் பிறரது குறைகளை துருவி துருவி ஆராய முன்னர், கொஞ்சம் கண்ணாடி முன் நின்று பிறரை குறைபிடிக்க நாம் தகுதியானவர்தானா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
சம்மாந்துறை - அன்சார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -