3ஆண்டுகளில் கிழக்கில் அனைத்து குறைபாடுகளும் முழுமைப்படுத்தப்பட வேண்டும்

னைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவையும் வாட்டுத் தொகுதியையும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். 

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து குறைபாடுகளும் முழுமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

உண்மையிலே நாட்டின் மக்கள் பல விதமான நோக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். எமது மக்கள் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மட்டுமல்லாது நாடுமுழுவதும் மக்கள் துன்பத்துக்குள்ளாகினர். இந்த நாட்டில் வாழும் மக்கள் சமாதானத்துடன் வாழ கூடிய வகையில் அரசாங்கம் செயல்பட வேண்டும். அதைதான் எமது அராசங்கம் நோக்காகக் கொண்டு தற்போது செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தி வருகின்றோம் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் உறுதிசெய்யப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவ்விமர்சனங்களை சாதகமாக எடுத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டைத் துண்டாடாத வகையில் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. இதற்கான அடிப்படை நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டிலே இலவச சுகாதார முறையை சிறப்பாக செயற்படுத்தி வைத்தியசாலைகளை நிர்மானித்து வைத்தியதுறை அபிவிருத்தி செய்து வருகின்றோம். இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை இன்னும் இடம்பெற சிறப்பாக செயலாற்றுவோம். நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி, சுகாதாரம் முறையாக இருந்தால் முன்னேறும். நாட்டின் கல்வி அறிவு அதிகமாக இருந்தால் நாடு வெற்றியடையும். அதேபோல் நோயற்ற மக்களாக வாழ்ந்தால் வெற்றியடைந்த நாடாக மாறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியில் 514 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் வாட்டுத் தொகுதியுடனான புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, வாட்டுத் தொகுதிக்கு முதன் முதலாக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பதிவுசெய்யும் நடவடிக்கையையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் உட்பட மாகாணத்தின் சுகாதாரத் துறை முன்னேற்றத்திற்காக பாடுபடும் அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவர் ஒருவரினால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியம் அம்மாணவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண அமைச்சர் ஆரயவதி கலப்பத்தி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகானுமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -