அம்­பாறையில் 340 தொல்­பொருள் அமை­வி­டங்­கள் - ஜனா­தி­பதி

தொல்­பொருள் திணைக்­களம் அம்­பாறை மாவட்­டத்தில் சுமார் 340 தொல்­பொருள் அமை­வி­டங்­களை, காணி­களை இனங்­கண்­டுள்­ளது. அவ்­வி­டங்­க­ளுக்கு விரைவில் பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைத் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ர­வுக்­க­மை­வாக இத்­தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளுக்கு சிவில் பாது­காப்பு படை­யி­னரும், பொலி­ஸாரும் இணைந்து பாது­காப்­பினை வழங்­க­வுள்­ளனர்.

தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கும் கிழக்கு மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான பிரதி பொலிஸ்மா அதிபர் உட்­பட பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­னை­ய­டுத்து அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்கள் விரைவில் பாது­காப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன என தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ருவர் "விடி­வெள்ளி"க்குத் தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்­டத்தில் தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் இனங்­கா­ணப்­பட்­டுள்ள தொல்­பொருள் அமை­வி­டங்கள் பல அழி­வுக்­குள்­ளாகி வரு­கின்­றன.

எனவே, இப்­ப­கு­தி­க­ளுக்கு எல்­லை­யிட்டு பாது­காக்­க­வேண்­டி­யது தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கட­மை­யாகும். ஜனா­தி­ப­தியும் இது விட­யத்தில் அதிகம் கவனம் செலுத்­தி­யுள்ளார்.

இனங்­கா­ணப்­பட்­டுள்ள பகு­தி­க­ளுக்கு விரைவில் பாது­காப்­புக்­காக சிவில் பாது­காப்பு படை­யி­னரும் பொலி­ஸாரும் அனுப்­பி­வைக்­கப்­ப­டு­வார்கள்.

அம்­பாறை மாவட்­டத்தில் மட்­டு­மல்­லாது நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் தொல்­பொருள் பிர­தே­சங்கள் பாது­காக்­கப்­படும். பாது­காப்புக் கட­மை­களில் சிவில் பாது­காப்பு படை­யி­னரும் பொலி­ஸாரும் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இத்­திட்­டத்தை தொல்­பொருள் பிராந்­திய அலு­வ­ல­கங்கள் பிராந்­திய ரீதியில் முன்­னெ­டுக்கும் என்றார். 

இதே­வேளை, தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் கிழக்கில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள தொல்­பொருள் அமை­வி­டங்­களில் சிவில் பாது­காப்புப் படை­யி­ன­ரையும், பொலிஸ் உத்­தி­யோ­க­த்­தர்­க­ளையும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­து­வது அப்­பி­ர­தேச மக்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்தும். நாட்டில் நல்­லி­ணக்கம் உறு­தி ­பெ­றும்­வரை இத்­திட்டங்களை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

கிழக்கில் இனங்­கா­ணப்­பட்­டுள்ள தொல்­பொருள் அமை­வி­டங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

தொல்­பொ­ருட்கள் கட்­டா­ய­மாகப் பாது­காக்­கப்­பட வேண்டும். அது தேசிய சொத்­தாகும். ஒரு மதத்­துக்கோ இனத்­துக்கோ சொந்­த­மா­ன­தல்ல. அப்­பி­ர­தே­சத்தில் படை­யி­னரை நிறுத்­து­வதை சுமார் ஐந்து வருட காலத்­துக்­கா­வது கால­தா­ம­தப்­ப­டுத்த வேண்டும். தொல்­பொருள் அமை­வி­டங்கள் புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான மாற்றுக்காணி வழங்கப்பட வேண்டும்.

காணிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நீதிமன்றினை நாடாது திணைக்கள மட்டத்திலே அவற்றைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் தீர ஆலோசித்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சரையும் கலந்துரையாடியே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -