வலம்புரி கவிதா வட்டத்தின் 34வது பௌர்ணமி கவியரங்கு கடந்த 10-02-2017 வெள்ளிக்கிழமை
காலை கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
கவியரங்கு சுடர் ஒளி ஞாயிறு வெளியீடு பிரதம ஆசிரியர் திரு. ராதா மேத்தா தலைமையில் நடைபெற்றது. திரு. ராதா மேத்தா மிகவும் சுவாரஷியமாக தலைமையேற்று நடாத்திய இக் கவியரங்கில் கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், தாஜ்மஹான், கவிக்கமல் ரஸீம், சுபாஷிணி பிரணவன், வெளிமடை ஜஹாங்கீர், உணர்ச்சிப் பூக்கள் ஆதில், தேஜாஸ்ரீ பிரணவன், ஆஷிகா ராஹிலா ஆலம், அப்துல் அஸீஸ், ஜொயெல் ஜோன்சன், மட்டக்களப்பு க. லோகநாதன், மலாய்கவி டிவங்கோ, வாழைத்தோட்டம் எம். வஸீர், ஜைலா பார்த்திபன் (ஒளி அரசி), எஸ். தனபாலன், கம்மல்துறை இக்பால் ஆகியோர் தங்கள் உணர்ச்சிப் பொங்கும் கவிதைகளால் அரங்கை கலகலப்பாக்கினர்.
மறைந்த ஸ்தாபகச் செயலாளர் கவின் கமல் இர்ஷாத் கமால்தீன் நினைவாக வெளியிடப்பட்ட 'படிகள்' சஞ்சிகை அதன் ஆசிரியர் வசீம் அக்ரம் மற்றும் கட்டுரை ஆசிரியர் டாக்டர் தாசிம் அகமது ஆகியோரினால் வகவத்திற்கு கையளிக்கப்பட்டது. அதனை செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி, மேமன்கவி, ஈழகணேஷ் ஆகியோர் வகவ சார்பாகப் பெற்றுக்கொண்டனர்.
கலைவாதி கலீல், ஒளி அரசி சஞ்சிகை ஆசிரியர் ஆர். ஜனாதன், நாச்சியாதீவு பர்வீன், யாழ் அஸீம், ஏ.எம்.எஸ்.உதுமான், அ.ரெளிபேட், இப்னு அஸூமத், நஹீதா சப்னம், கவிநேசன் நவாஸ், 'நிஜம்' நிஜாம் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.