சர்வதேச விருது பெறும் 56 சாய்ந்தமருது இளைஞர்களுக்கும் வாழ்த்து - ஜெமீல்

றிஸ்கான் முகம்மட்,இஸ்மாயில் இப்தார்-
ளைஞர் சேவை மன்றத்தின் விருது வழங்கள் திட்டத்தில் வழங்கப்படும் சர்வதேச டியுக் எடிம்பார்க் (DUKE EDINBROUGHE) சர்வதேச விருதில் எமது அம்பாறை மாவட்டத்தில் இருந்து சாய்ந்தமருதைச் சேர்ந்த 56 இளைஞர்கள் தெரிவு செய்யபட்டு இருப்பது எமது மன்னுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாககும் இந்த விழா எதிர் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் (06/03/2017) அலரிமாளிகையில் இலங்கை நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமகிங்க அவர்களால் வழங்கப்பட உள்ளது இந்த விருதினை எமது இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக இரவு பகலாக பாடுபட்டு இந்த இளைஞர்களை மூன்று வருடங்களாக வழி நடத்திய முன்னாள் இளைஞர் பாராளமன்ற உறுப்பினரும் இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சருமான சகோதரர் முஹமட் றிசான்க்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

மேலும் எதிர்காலத்தில் இந்த விருதினை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கான சகல உதவிகளையும் செய்து அவர்களை அடுத்த சர்வதேச விருது பெற தகுதி உடயவர்களாக மாற்றுவதற்கு என்னால் முடியுமான உதவிகளை வழங்குவேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் கட்சியின் அம்பாறை மற்றும் சாய்ந்தமருது அமைப்பாளரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகிய நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
'எடின்பார்க்' விருதுபெறும் சாய்ந்தமருது ஜெ.எம்.பாஸித் !
எம்.எம்.ஜபீர்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் 'எடின்பார்க்' பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவர் ஜெ.எம்.பாஸித், சர்வதேச 'வெண்கல' விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது. இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் சாய்ந்தமருது பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினருமாவார். தேசிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் மாநாடுகளில் மற்றும் பல்வேறு நிகழ்வில் பங்கேற்றவர். 

மேலும் இவர் லெமன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் நிருவக உத்தியோகஸ்த்தராக பணி புறிகின்றார். இவர் சாய்ந்தமருது அல்-கமறூன் , கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவர்.

இவ் விருதினைப் பெற்றுத்தர பல தியாகத்தினையும், அர்பனிப்பையும் புரிந்த முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் ஏ.எல்.எம்..றிஸான் அவர்களுக்கும் பிரேவு இளைஞர் கழகம் சர்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -