69 வது சுதந்திர நிகழ்வு : அட்டாளைச்சேனையில்



எம்.ஜே.எம்.சஜீத்-
லங்கை நாட்டின் 69 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இன்று (04) விரிவுரையாளர் ஏ.எல்.நாஸிர்கனி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் ஒய்வு பெற்று சென்ற முன்னயநாள் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.ஏ.எம்.ஜெலில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பேது...

மனிதனை மனிதன் மனிதநேயத்துடன் புரிந்து கொண்டு தனது அன்றாட தேவையை எந்த விதமான தங்குதடையின்றி செய்கின்ற போதும், தனது கடமைகளை உரிமையாக மற்றவர்களுக்கு கஷ்டம் இல்லாமல் செய்யும் போதுதான் அவன் பூரண சுதந்திரம் அடைந்தாக உணர்கின்றான் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், ஆசிரிய பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.





றிசாத் ஏ காதர்-
ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தள ஆயுர்வேத வைத்தியசாலையில், இலங்கையின் 69 ஆவது சுதந்திரதினத்தினை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வு இடம்பெற்றது.

தள வைத்திசாலையின் வைத்திய அத்தியட்சகர், கே.எல்.எம்.நக்பர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -