பாகிஸ்தானில் பயங்கர தற்கொலைத் தாக்குதல்! 75 ற்கு மேற்பட்டோர் பலி




 
எஸ். ஹமீத்-

ஜும்மா இரவான வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின்னர் பாகிஸ்தானின் தெற்கே சிந்து மாகாணத்தின் செவான் நகரில் உள்ள லால் ஷாபாஸ் கலந்தர் என்னும் பள்ளிவாசலில் தற்கொலைக் குண்டுதாரி நிகழ்த்திய மிக மோசமான தாக்குதலில் இதுவரை 75 ற்கு மேற்பட்டோர் வபாத்தாகியுள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் கடும் காயங்களுக்குள்ளாகி, உயிருக்குப் போராடுகின்றனர்.

இஷாத் தொழுகையின் பின்னர் மேற்படி பள்ளிவாசலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்களென 500 ற்கு மேற்பட்டோர் பங்கு பற்றிக் கொண்டிருந்தார்களெனவும், அவ்வேளை பெண்கள் பகுதிக்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி தன் உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அருகிலுள்ள தாலுகா வைத்தியசாலையில் மாத்திரம் 100 ற்கும் மேட்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநில இஸ்லாமியக் குழுவொன்று இத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஷியாக்கள் குழுமியிருந்த இடத்தில் தாங்கள் தாக்குதலை மேற்கொண்டதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தனது வன்மையான கண்டணத்தைத் தெரிவித்துள்ளார். அத்தோடு, ''கடந்த சில நாட்கள் மிக்க கடினமானவையாக இருந்துள்ளன. இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.'' என்றும் அவர் கூறியுள்ளார்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, அப் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -