800 வருடம் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் மிகப்பெரிய பள்ளிவாசலானது..!

ல்ஹம்துலில்லாஹ். நானும் வேல்ஸ் நாட்டுக்கு வந்து 6 வருடமாகுது. எப்போதும் பள்ளிவாசலுக்காக வாங்கிய கிறிஸ்த்தவ தேவாலயத்தின் திருத்த வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். அது சுமார் 13 வருடங்களாக நடந்து கொண்டு வருகிறதாம் இங்கு கல்வி கற்க வந்த ஒரு அறபு நாட்டு மாணவன் இந்த 800வருடம் பழமையான தேவாலயம் விற்பனைக்கு வருகிறது என்று அறிந்ததும் அதனை பள்ளிவாசலுக்காக வாங்க முழுமையான நிதியினை வழங்குகிறேன் ஆனால் பெயரைக்கூட யாரிடமும் சொல்ல வேண்டாம் தனது பெயரை எந்த கல்வெட்டிலும் பொறிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு பல கோடி பெறுமதியான அந்த கிறிஸ்த்தவ தேவாலயத்தை மஸ்ஜித்துக்காக வேண்டி நிலையான தர்மம் செய்யதுவிட்டு சென்றுள்ளார்.

அதேபோல் பல மில்லியன் பவுண்கள் 13 வருடங்களாக பலவகையிலும் அறவீடு செய்து அதனை திருத்தம் செய்து இன்று முழுமையான பள்ளி வாசலாக மாற்றியுள்ளார்கள்.

திருத்த வேலைக்கே 13 வருடம் சென்றது என்றால் அந்த பள்ளிவாசலின் அளவு எவ்வளவு விசாலமானதாக இருந்திரிக்கும். மேலும் அதை பள்ளி வாசலுக்காக வாங்கி அன்பளிப்பு செய்த அந்த நபரின் மனதை எம்மால் அளவிட முடியுமாலும் உள்ளது.

அந்த கிறிஸ்தவ தேவாலயம்தான் சுவான்சியா நகரின் ஆகப்பெரிய கிறி்ஸ்தவ தேவாலயம் இப்போது அது வேல்ஸ் நாட்டின் மிகப்பெரிய பள்ளிவாசலானது.

இந்த நாட்டு சட்டத்தின்படி தேவாலயங்களை வேறு எந்தவொரு தேவைக்காவும் கொள்வனவு செய்தால் அதன் வெளிப்புற தோற்றத்தில் எந்தவொரு பெரிய மாற்றத்தினையும் செய்ய முடியாது சிறு சிறு அலங்கிரிப்புகள் செய்யலாம் ஆனால் உட்கட்டமைப்பை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம் இது ஒரு பழமை பேணுதலின் அடிப்படையே அன்றி எந்த ஒரு மதத்தடையும் இல்லை.

இருந்தும் அந்த தேவாலயத்தை பார்க்கும்போது பள்ளிவாசலுக்காக என்று கட்டப்பட்டமாதிரியே வெளிப்புற தோற்றம் காட்ச்சியளிப்பது இறைவனின் ஏற்பாடே. இந்த பள்ளிவாசல் நிறுவப்படுவதற்க்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மட்டுமன்றி உள்ளூர் வேல்ஸ் நாட்டு வெள்ளைக்காரர்களின் பங்களிப்பும் மிகவும் மகத்தானதே.

24.02.2017 அன்று அந்த பள்ளிவாசலின் ஒரு பகுதி (இரண்டு தட்டுக்கள்) திறப்புவிழாவும் முதலாவது ஜும்மாவும் நடை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஷிமாஸ் பாரிஸ் .. ஐக்கிய இராச்சியம் வேல்சில் இருந்து. 
இணையத்தில் இருந்து சிஹான்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -