90களில் பயணம் இப்படித்தான்..!

90களில் பயணம்
+++++++++++++++
கொழும்புக்குச் செல்வோர்
கூடிக் கதைப்பார்
ரூட்டுக் கிளியரா
கேட்டுக் கொள்வார்.
கிரான் சந்தியில
கிளைமோர் அடிச்சதில்
இராணுவம் செத்தயாம்
இண்டக்கி எப்பிடியும்
எட்டுக்குப் பிறகுதான்
எஸ்கோட் குடுப்பான்.

யுத்தம் செல்வது போல்
புத்திகள் சொல்லி
வீட்டார் அனுப்புவார்
கேட்பார் பல துஆ.
ஐடி எடுத்தியா
ஆயிரம் தரம் கேட்பார்.

பத்துக்கும் மேல
மொத்தச் செக் பொய்ண்ட்
செங்கலடிக் கேம்பில்
மொங்குவான் முரண்டால்
மன்னம்பிட்டி பொயிண்டில்
மன்னரும் இறங்கனும்.

ஒக்கம பஹிண்ட
செக்பொயிண்ட் சத்தம்.
பேக்குடன் சென்று
காக்கணும் போலினில்.
கேட்கும் முதலே
காட்டணும் ஐடிய
கொஹ்த யன்னே?
கொழும்புக்குப் போறன்
மொகடத யன்னே
மூத்த காக்காக்கட கடக்கி
என்னே கவத்த
இரண்டு நாளைல

தொட்டுத் துளாவி
கட்டிய பார்சலை
வெட்டிக் காட்டென
விறைப்பாய் சொல்வான்
சீனிமா என்பதை
சிங்களத்தில் சொல்ல
மூணு நாலு பேர் சேர்ந்து
முயற்சித்து விளக்குவார்.

அப்புறம் கையை
அப்படியே உயர்த
அழுக்கான கிளவ்ஸுடன்
முழுக்கத் தடவுவான்.

கொஞ்சந் தள்ளி
அஞ்சாறு பேரொடு
பொம்மை ஒன்று
சும்மா பார்க்கும்.

தலைய ஆட்டினா
தொலையும் வாழ்க்கை
நாலாம் மாடியில்
தோலை உரிப்பான்.

தூரத்தில் எங்கயோ
துப்பாக்கி வெடிக்கும்.
சத்தத்தை வைத்து
சரியாகச் சொல்லலாம்
என்ன துவக்கால
யாரு சுடுகிறான்.

கேம்பைச் சுற்றி
கிடங்கு வீதியில்
போகும் போது
சாகும் இடுப்பு

கதுருவல வரைக்கும்
எதுவும் நடக்கலாம்
விதியில் இருந்தால்
எதிரெதிர் சண்டையில்
இடையில் பட்டு
முடியும் வாழ்க்கை.

இன்று நிலமை
எல்லாம் மாறிட்டு
எந்த பஸ்ஸில்
இருக்கு WiFi ன்னு
முந்தியே புக் பண்ணி
முக நூல் பார்த்து
படுத்துச் செல்கிறார்
கொடுத்து வைத்தவர்கள்...!
எம்.நிலோஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -