ஆடை விடயத்தில் ட்ரம்பின் அதிரடி உத்தரவு! கொந்தளிக்கிறது அமெரிக்கா!!

எஸ். ஹமீத்-

வெள்ளை மாளிகையில் பணி புரியும் எல்லோருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்திருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.

வெள்ளை மாளிகைக்குள் பணி புரிவதற்காக வருவோர் தமது தோற்றத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். சிறப்பான ஆடைகளையே அணிய வேண்டும். ஆண்கள் 'டை' கட்டுவது அவசியமாகும் என்று ட்ரம்பின் உத்தரவு தெரிவிக்கிறது.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் வெள்ளை மாளிகைக்குப் பணிக்கு வருகின்ற பெண்களுக்கான ஆடையைப் பற்றிக் குறிப்பிடும் போது ''பெண்கள் பெண்களைப் போல உடையுடுத்த வேண்டும்'' என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் '' பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்குத் தடை கிடையாது. ஆயினும், அவர்கள் அணியும் ஆடைகள் அவர்களது தோற்றத்தைப் பாதிக்காமலும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆடைக் கட்டுப்பாட்டு உத்தரவு அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுபற்றிய காராசாரமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

''நாங்கள் பெண்களாக நடந்து கொள்கிறோம். ஆனால் நீங்கள் பிரசிடெண்டாக நடக்க முயலுங்கள்.'' என்று ஒரு பெண்மணி தனது குமுறலைக் கோபத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -