மோதல்கள் மற்றும் போதைப் பொருள் பாவனை ஆகியவற்றின் தாக்கங்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்படும் பிக் மெச் கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் எதிர்ப்பு வேலைத்திட்டம் சம்பந்தமாக அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் பிக் மெச் கிரிக்கெட் போட்டிகள் காரணமாக மாணவர்களுக்கு இடையில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்த மோதல்கள் பாரிய அடிதடி தாக்குதல் அளவுக்கு சென்றுள்ளதுடன் தமக்கும் பெரும் அசௌகரியமான நிலைமை ஏற்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.