க.கிஷாந்தான்-
அட்டனில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை (ஸ்கூட்டி) இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இந்தச் சம்பவம் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – ஆரியகம பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அட்டன் ஆரியகம பகுதியில் வசிக்கும் நதுன் சமீர என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் மோட்டர் சைக்கிளே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிள் எரியும் வெளிச்சத்தினைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அயல்வர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதிலும், மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
அத்தோடு தீயினால் குறித்த நபரின் கடை பகுதியும் சிறிதளவு சேதமாகியுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.