அரசியல் சூதாட்டத்தில் அடமானம் வைக்கபடும் முஸ்லிம் சமுகம்

மருதமுனை கலீல் முஸ்தபா-

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் கலாசாரம் பணத்தையும் பதவியையும் மையமாக நோக்கிப் பயணிக்கின்ற அரசியலாக அவதானிக்க முடிகின்றது. தாறுஸ்ன் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட புதையல்கள் முஸ்லிம் சமுகத்தை அதிரவைத்துள்ளது.

கடந்த காலத்தில் பல உயிர்களையும் உடமைகளையும் இழந்து துன்பப்பட்டு, துயரப்பட்டு அல்லல்பட்டு அவலப்பட்ட பல ஆயிரம் ஆத்மாகளின் தூஆக்கள் வீண் போகவில்லை. தவிசாளர் பஷீருக்கும் செயலாளர் ஹசன் அலிக்கும் அல்லாஹ்வின் அருளால் ஹிதாயத் என்னும் நல்வழி கிடைத்து. செய்த தவறை வருந்தி மன்னிப்புக்கோரி மர்ஹும் பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் சமுகத்துக்காக உருவாக்கிய அமானிதத்தை மீட்கப் புறப்பட்டுள்ளார்கள். என்பதை ஊடகங்களூடாக அறிய முடிகின்றது.

கட்சியை மதத்துக்கு ஒப்பாக மதித்து வாக்களித்து கட்சியை வளர்த்த அப்பாவி மக்களின் அமானிதங்கள் சொத்துக்களும் வருமானங்களும் இது வரைக்கு மூடி மறைக்கப்பட்டு ஒரு சில குடும்பம் அனுபவித்துக் கொண்டிருப்பதை மட்டுமல்லாமல் முஸ்லிம் சமுகத்தின் உரிமையை கொடுத்து பதவியையும் பணத்தையும் பெறும் பண்டமாற்று அரசியல் வியாபாரத்தையும் இந்த மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகம் ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் சமூகம் என்ற பெயரல் சமூகத்தின் இரத்தம் குடிக்கும் முக மூடிக்கொள்ளைக்காரர்களின் முகத்திரையைக் கிழிக்கின்றது.

அன்றைய காலத்தில் பெரும் தலைவர் மாவீரன் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் கவசமாக நூஆ என்ற அரசியல் கட்சியையும், கட்சியைக் காப்பாற்றுவதற்கும் வளர்தெடுத்து கட்சியை வளி நடத்திச் செல்வதற்கான வருமானத்தைத் திரட்டுவதற்கு மூலதனமாக கொடையாளர்கள் மூலம் கிடைக்கபெற்ற நிதியைப் பயன்படுத்தி சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட தாருஸ்ஸலாம் என்ற பல அடுக்கு மாடிக்கட்டடத் தொகுதியையும், லோட்டஸ் என்ற நம்பிக்கை நிதியம் அத்துடன் யுனிட்டி பில்டர்ஸ் என்ற வரையறுக்கப்பட்ட கம்பனியையும் இஸ்தாபித்தார் என்று ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த புதைந்து கிடந்த புதையல்கள் இப்போது அடிமட்டப்போராளிகள் வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற புத்தகம் கொண்டு சென்றுள்ளாதாக முஸ்லிம் பிரதேசத்தின் மூலை முடுகெல்லாம் பேசப்படுகின்றது.தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் மஸூறா அடிப்படையிலான இணைத்தலைமைத்துவம் தூக்கி வீசப்பட்டு,கட்சியும் அதன் அதிகாரங்கள் ஹக்கீமும் சொத்தும் வருமானங்களும் கம்பனிகளும் இன்னும் ஹாபிஸும் சல்மானும் அபகரித்து எமது தலைவர் அஸ்ரப் அவர்களின் கொள்கைகளையும் கனவுகளையும் அழித்து விட்டார்கள் என்ற அதிர்ச்சித்தகவல்கள் தாறுஸ்ஸலாமின் மறைக்கபட்ட மர்மங்கள் என்ற புத்தகத்தில் குறிபிடப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான யுனிட்டி பில்டர்ஸ் கம்பனிக்கு ஹக்கீம் அவர்கள் 29-01-2015 இல் பணிப்பாளராக நியமனம் பெற்று அதற்கு மாமூலாக ஹாபிஸுக்கு சீ.எம். பதவியும் சல்மானுக்கு தேசியப்பட்டியல் பதவியும் தருவதாக வாக்குறுதி செய்யப்படுள்ளது மட்டுமல்லாமல் மூன்று பேரும் பங்கு உடமையாளராகினார்கள் எனவும் அப்புத்தகத்தில் குறிபிடப்பட்டுள்ளது.

போராளிகளே ! புறப்படுங்கள். நமது முஸ்லிம் சமுகம், அதன் உரிமைகள், விழுமியங்கள் அதற்கான தியாகங்கள் அர்ப்பணிப்புகள் தனிதுவம் என்றெல்லாம் மக்களை முறுக்கேற்றி உசுப்பேற்றி மேடைகளில் வாய்கிளிய பேசியது தங்கள் மூன்று குடும்பங்களின் நல்வாழ்வுக்கு என்பதை அப்புத்தகம் உணர்த்துவதாகக் காணப்படுகின்றது.சாணக்கியரால் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த பாராட்டுகள்

கடந்த ஜனாதிபதித்தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபா பணம் கொடுத்ததாக கட்சியின் தவிசாளர் ஊடகங்களில் கூறினார்.

மிகவும் நேர்மையான அரசியல்வாதி லிபரல் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதியமைச்சர் பா.உ பேராசிரியர் ரஜிவ விஜயசிங்க அவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் காலத்தில் பல கோடி பணம் பெற்றதாக பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவிக்கும் பணத்துக்கும் மதம் மாறக்கூடியவர் என்று சுகாதார அமைச்சர் ராஜித அவர்கள் பல இடங்களில் பேசியது பலரும் அறிந்த விடயமகாவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒரு அரசியல் வியாபாரி என்று முன்னாள் ஜனாதிபதி பல இடங்களில் தெரிவித்துள்ள விடயம் ஊடகங்களில் அறியக்கூடியதாக இருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கத்தின் தலைவருக்கு இவ்வாறு வழங்கப்பட்ட நற்சான்று அறிக்கையினால் சமூகத்தின் மானம் கொடி கட்டிப்பறக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தைப் பாதுகாக்க இவர்களின் கருத்துகளுக்கெதிராக ஒரு கண்டன அறிக்கையோ மறுப்பறிக்கையோ தெரிவிக்க வக்கில்லாத தன்மானம் காக்க வந்த தானைத் தலைவர்கள்.

தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு சாட்சியாக மாறி, உண்மையை வெளிப்படுத்தி மக்களின் அமானித்தைக்காத்து மக்களிடம் ஒப்படைக்கப் புறப்பட்ட தவிசாளருக்கு துரோகிப்பட்டம் சூட்டி, அவருக்கெதிராக நடவடிக்கையெடுப்பதென்பது வெறும் வேடிக்கையான விடயமாகக் கருதப்படுகின்றது.

இந்த நாட்டில் பயங்கரவாத யுத்த சூழ்நிலையில் காணாமல் போன கடத்தப்பட்ட உயிரிழந்த குடும்பங்களின் அவலங்களுக்கும் துன்பங்களுக்கும் அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கும் காணிப்பறிப்புகளுக்கும் பேரினவாதச் சக்திகளின் சதித்திட்டங்களுக்கும் அவர்களின் கழுத்தறுப்பு மற்றும் சமய அனுஸ்டான மறுப்புகளுக்கும் பேரியக்கம் என்று சொல்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளை இதுவரைக்கும் வரையறுத்து, தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தி, தைரியமாகப் பேச முடியாமல் தெளிவற்ற நழுவல் போக்குள்ள சொற்பிரயோகங்களை இடத்துக்கு இடம் மாறி மாறிக்கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டு கட்சிக்குள் தனி நபர்களைத் திருப்திபடுத்தும் காரியங்களை மட்டும் செய்து கொண்டு செல்வதை மட்டும் தான் அவதானிக்க முடிகின்றது.

இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றோர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வானது அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அலகாகவும், இறைமை பகிரப்பட்ட சம்ஸ்டி அடிப்படையிலான தீர்வாகவும் எங்களை நாங்களே நிர்வகிக்கக்கூடிய ஒரு ஆட்சி முறை அமைய வேண்டுமென்பதை மிகவும் தெளிவாகவும் வரையறை செய்து, தைரியமாக இலங்கை அரசாங்கத்திடமும் சர்வதேச பிரதிநிதிகளிடமும் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றார்கள் என்பதை அறியக் கூடியதாகவுள்ளது.

மர்ஹும் தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் சாணக்கியர்கள் செய்த சாதனை தான் என்ன?

1987 ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட அநீதிக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவரின் மரணத்தின் பின்னர், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகளைப்பெற்றுக் கொடுக்க இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல சுற்றுச்பேச்சுவார்த்தையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கபட்ட போது, பாரளுமன்றில் அன்று 10 ஆசனங்களுடன் பேரம் பேசும் சக்தியாக இருந்த இந்த சாணக்கியர்கள் பல கோடிகளுக்காக பேச்சுவார்த்தை மேசைகளைத் தவறவிட்டிருப்பார்கள் என்று இப்போது மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

2002 டிசம்பர் மாதம் நோர்வையில் மூன்று சுற்றுச்பேச்சு

2003 ஏப்ரல் மாதம் வாசிங்டனில் மீள்வட கிழக்கு கட்டுமானப்பணி தொடர்பான பேச்சு

2006 பெப்ரவரியில் ஜப்பான் அனுசரணையுடன் ஜெனிவாவில் பேச்சு
2006 ஜூன் ஒஸ்லோவில் பேச்சு2002 ஆம் ஆண்டு சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்த்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடமேற்றி சாணக்கியன் என்ற மகுடம் பெற்ற தலைவர் அந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கபட்ட போது சமூகத்துக்காக அமைச்சுப்பதவிகளை இராஜினாமாச் செய்து ஆட்சியிலிருந்து வெளிவர முடியாத விடயம் பல கோடி டொலருக்கு என்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகின்றது.

முஸ்லிம்களின் ஜனநாயக அரசியல் போராட்டத்தை ஆரம்பித்து வழி நடாத்திய குற்றத்திற்காக முஸ்லிம் காங்கிரசை நிராகரித்து மாவீரன் அஸ்ரப் அவர்களை புலிகளின் கொலைப்பட்டியலில் முதன்மைப்படுத்தி மருதமுனையில் மயிரிழையில் தப்பி அரணாயக்கவில் தடம் தெரியாமல் அழித்தவர்களுடன் கிளிநொச்சியில் தேன் நிலவு கொண்டாடியதற்கும் தவிசாளர் பஷீரைப் போல் இன்னுமொருவர் துரோகி என்ற பெயரால் சமூகத்துக்காக சாட்சி சொல்ல வருவார் என்று பேசப்படூகின்றது.

அமான் அஸ்ரபின் அரசியல் பிரவேசத்தைத் தடுப்பதற்காக வாரிசு அரசியல் தடையை முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்படுத்தியது எதற்காக என்று மக்கள் புரிந்துள்ளனர்.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர், பேரினவாதிகளின் அட்டகாசம் தம்புள்ளையிலிருந்து அழுத்கம வேருவளை மன்னார் வில்பத்து வட்டை மடு நுரைசோலை வரையும் அத்துடன் மருதமுனை 65 மீற்றர் சுனாமி வீட்டுத்திட்டம் ஒலுவில் பிரச்சினை வடபுல மக்களின் மீள்குடியேற்றத்தில் காணப்படும் தடைகள் மத கலாசார அனுஸ்டான விடயங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் இனபிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் என்ற பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகம் எதிர்பாக்கும் தீர்வுகள் என்ன? என்பதையும் அத்துடன் முஸ்லிம் சமூகம் சார்ந்த அநீதிகளை அரசாங்கத்திடம் இதுவரைக்கும் வரையறை செய்து சமர்ப்பிக்கப்படவில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஊடகங்களில் மிகவும் வருத்தமுடன் தெரிவித்திருந்ததும் குறிபிடத்தக்கது.

போராட்ட அரசியலானது தற்போது சாணக்கியரின் தெளிவற்ற நழுவல் போக்கு சொற்பிரயோகத்தால் பணம் பதவி சலுகை என ஆசை காட்டி பல ஆயிரம் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வாக்குறுதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறிப்பிட்ட நபருக்கெதிராக இன்னும் ஒருவரை உருவாக்கி அவர்களுக்குள் கருத்து முரண்பாட்டை வளர்த்து பின்னர் கட்சிலிருந்து இடைநிறுத்தி துரோகி என்று சேறு பூசும் அனாகரீகமான சூதாட்ட அரசியல் கலாசாரமாக மாற்றப்பட்டது.

இளைஞர்களுக்கு பணமும் பதவியும் என்ற வாக்குறுதி கொடுத்து, இணையதளங்கள் முக நூல்களில் மாற்றுக்கட்சி சகோதரர்களுக்கெதிராக அவதூறுகள் செய்து முஸ்லிம் சமூகத்தின் முகங்களில் கரி பூசுகின்ற அநாகரிகமான அரசியல் கலாசாரமாக மாற்றப்பட்டது.

1993 ஆம் ஆண்டுக்குப்பின்னர் கெளரவ பிரதியமைச்சர் ஹரிஸ் அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு சமாந்திரமான ஒரு இளைஞர் அமைப்பை முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக தனது சொந்தப்பணத்தில் வழி நடத்திச்சென்ற ஒரு சமூகத்துடிப்புமிக்கவர். தலைவரின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்ததும் என்ன மாயமோ ! மந்திரமோ தெரியவில்லை. செயலிழந்து விட்டார் என மக்கள் கருதுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு அடுக்கடுக்காக அநீதிகளும் அழிவுகளும் ஏற்பட்ட போது, முஸ்லிம் காங்கிரஸ் வாய் திரக்காமல் அரசோடு அந்தப்புரத்தில் இருந்த போது, ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிவில் பிரகடனத்தில் முஸ்லிம்களின் விடுதலை வீரன் என்று அன்று இளைஞர்களால் அடையாளப்படுத்தப்பட்ட கெளரவ மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களும் முஸ்லிம் காங்கிரசில் சங்கமித்து செயலிழந்து விட்டதாகப் பேசப்படுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு சமூக உணர்வாளர்களும் பேர்முடா முக்கோண வலயத்தில் பறந்த விமானம் போல், சமூக உணர்வற்றவர்களாக சமூகத்தில் சித்தரிக்கப்படுகின்றார்கள்

முஸ்லிம் காங்கிரசின் பா.உ. ஆசனம் 10 லிருந்து 05 ஆகக்குறைந்துள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் தனி நபர்களின் கைக்குச் சென்றுள்ளது.

கட்சிக்குள் இருக்கும் புண் வெடித்து வெளியில் துர்நாற்றம் வீசுகின்றது

கட்சிக்குள் ஆயிரம் போலி வாக்குறுதிகளும் மனக்கசப்புகளும் கழுத்தறுப்புகளும் மலிந்து விட்டது.

அன்று முஸ்லிம் சமூகத்தின் ஜனநாயக அரசியல் போராட்டத்தை நிராகரித்து துரத்தி துரத்தி கொலை செய்தவர்கள் இன்றைய தலைவருடன் நகமும் சதையுமாக இருப்பது சந்தோசமாகவும் சந்தேகமாவுமம் உள்ளது.

கல்முனை சம்மாந்துறை போன்ற பிரதேசங்கள் 2000 ஆண்டிலிருந்து அமைச்சரில்லாத அரசியல் அனாதைகளாகவும் படுவான்கரை பிரதேசங்களை விடவும் அபிவிருத்தியில் பின் தங்கிய பிரதேசமாக மாறியுள்ளது.

மறைந்த தலைவருக்குப் பின்னர் முஸ்லிம் சமுகம் சார்ந்த விடயங்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக செயலாளர் ஹசன் அலி அவர்கள் தனித்து நின்று பேசி தலைவர் ஹக்கீமுடன் முரன்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகம்.

அன்று கட்சிக்கும் கொள்கைக்கும் வாக்களித்த மக்கள் இன்று சாணக்கியரின் பாசறையில் வளர்ந்த போராளிகள் பணத்துக்கும், பதவிக்கும் வாக்களிக்கும் அரசியல் கலாசாரத்தைக் கற்றுள்ளார்கள்.

கடந்த கல்முனை மாநகர சபைத்தேர்தலில் கட்சியின் மூத்த போரளி கட்சிக்காக தனது குடும்ப உறுப்பினர்களை இழந்த தியாகி மறைந்த தலைவரால்முழக்கம் மஜீத் என்று அழைக்கப்படும்

அவர்களை தோல்வியடையச் செய்து அவருடன் போட்டியிட்ட கட்சியின் அறிமுகம் வெற்றியடைந்தது. தலைவரின் மரணத்தின் பின்னர் கட்சியின் கொள்கைகளுக்கும் தியாகங்களுக்கும் கிடைத்த தோல்வியாகும்.

கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்கள் மறந்து, பணம் உழைக்கும் நிறுவனமாக வளர்ந்து தெருவொர வியாபாரிகளின் விளம்பரம் போல் மறைந்த தலைவரின் கொள்கைகளும் புகைபடங்களும் காணப்படுகின்றன.

தலைவரின் மரணத்தின் பின்னர் மஸுறா அடிப்படையிலான இணைத்தலைமைத்துவத்தை நிராகரித்து, தான் தூக்க முடியாத பாரத்தை தூக்கி கிழே போட்டுடைத்தது கட்சியல்ல.
மறைந்த தலைவர் அவர்கள்! இந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றடுக்க பிரதேசவாதங்களை உடைத்துக் காட்டி எழுப்பிய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையும் அரசியல் சக்தியையுமாகும்.

மறைந்த மாமனிதருக்கு பெரும் துரோகம் இழைக்கபட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவராக இருக்கலாம் ஆனால் இந்த பாரிய இயக்கத்தைச் சுமக்க முடியாதவர் என்பதை அவருடை 16 வருட காலத்தில் (அன்று 2001 ஆம் ஆண்டு மர்ஹும் மருதூர்க்கனி பா.உ அவர்களின் தீர்க்கதரிசனத்தை) நிரூபித்துவிட்டார்.

இன்று தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து, பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாறியுள்ளது. இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் மட்டுமல்ல சட்டங்களை மாற்றவும் புதிய சட்டங்களை உருவாக்க முடியுமனதாகவும் காணப்படுகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 1987 ஆம் ஆண்டில் நடந்தவாறு முஸ்லிம் சமூகத்தைப் புறந்தள்ளி முஸ்லிம்களின் முதுகில் அடிமைச்சாசனம் எழுதும் நிகழ்ச்சித் திட்டத்தை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

2000ஆண்டிலிருந்து ஆட்சி மாற்றங்களைச் செய்து தற்போது பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபையாக மாற்றியுள்ளார்கள்.

தற்போது இதை நடைமுறைப் படுத்தலிலுள்ள தடைகள் முஸ்லிம் அரசியல் சக்தியாகும். முஸ்லிம்களிடையே வேற்றுமையை வளர்த்து அரசியல் ரீதியாக பலமிழக்க வைப்பதனூடாக பாராளுமன்றில் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றார்கள்.

முஸ்லிம் சமூகம் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களை வென்றடுக்க வேண்டிய இக்கால கட்டத்தில் ஹக்கீம் றிஸாட் அதாவுள்ளா ஹிஸ்புள்ளாஹ் என்ற வேறுபாட்டுக்கப்பால் முஸ்லிம் சமூகத்தின் நிம்மதிக்காகவும், இளைஞர்களின் பாதுகாப்புக்காகவும் மஸூறா அடிப்படையிலான கூட்டுத்தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம், மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை ஒரு பேரம் பேசும் சக்தியாக நிலை நிறுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

மாறாக மீண்டும் பல கோடிகளுக்கும் டொலர்களுக்கும் சலுகைகளுக்கும் அந்தப்புர சுகத்துக்கும் ஆசைப்பட்டு முஸ்லிம் சமூகத்துக்கெதிரான சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் மாட்டிக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் கரி பூசி குரோதங்களை வளர்த்து பிரிவினைகளிலும், பிரச்சினைகளிலும் நேரங்களைக் கடத்தி சந்தர்ப்பங்களை தவற விட்டால் முஸ்லிம் சமூகம் இடுப்பில் கட்டுவதற்கு கோவணம் கூட இல்லாமல் பலஸ்தீனத்தை இஸ்ரவேலர்களுக்கு தாரைவார்த்த கதையாகி விடும்.

Kaleel musthafa
Bsc. Dip in Acc& Finance
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -