என்.எம்.பாசில்-
கடந்த சில வருடங்களாக கந்தளாய் குளத்தை அன்மித்து வாழும் முஸ்லிம்களை பெறும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பதற்கு தடைசெய்து வந்தமை கந்தளாய் மற்றும் அதனை அன்மித்த பிரதேச முஸ்லிம் மக்களை பெறும் இன்னல்களுக்குள்ளாக்கியது.
அதிகாரிகளோ அல்லது அரசாங்கமோ மீன் பிடிக்க எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட ஒரு சில விசமிகள் மாத்திரமே இவ்வாரான ஈனச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுமட்மின்றி நேற்றைய தினம் (21) மீன் பிடிக்கச் சென்ற ஒருவரை அடித்து குளத்தில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதனை அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்ட கந்தளாய் பிரதேச செயலாளர் காரியாலத்திற்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மீனவர்கள் மீது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கம்பு தடிகளால் அடித்து மற்றும் கற்களால் எரிந்து தாக்கியுள்ளார்கள். தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் மீனவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் கலவரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வந்ததோடு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மீன்பிடிக்க அனுமதியும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அத்காரிகளோ அரசியல்வாதிகளோ இதற்கான சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்காத பட்ச்சத்தில் இவ்விடயம் இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சனையாக மாறலாம். ஆகவே சம்மந்தப்பட்ட அத்காரிகளோ அரசியல்வாதிகளோ இதற்கான சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறும் நாட்டின் சமாதான, நல்லினக்கத்திற்கும் வழி வகுக்குமாறும் கோட்டுக்கொள்கின்றோம்.