'அல்லாஹு அக்பர்' என கோஷம் எழுப்பிய இளைஞன் சுடப்பட்டார்...?

எஸ்.ஹமீத் -
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நேற்றுக் காலை (03.02.2017) விஷேட படையினர் தம்மைக் கத்தி கொண்டு தாக்க முனைந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவ்வேளை அவர் 'அல்லாஹு அக்பர்' என்று கோஷம் எழுப்பியதாகப் படையினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்ட நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நேற்றுக் காலை பாரிஸிலுள்ள மிகப் புகழ்பெற்ற அருங்காட்சியகமான லூவ்ர் காட்சியகத்தின் கீழேயுள்ள கடையொன்றுக்குள்ளிருந்து வந்த இளைஞன் ஒருவன் அங்கு காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினரைக் கத்தியால் தாக்க முற்பட்டதாகவும் இதில் படை வீரர் ஒருவருக்குக் காயமேற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்குத் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர். ஆயினும், அந்நபர் மீது ஐந்து முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வயிற்றுப பகுதியில் சூடுபட்ட இளைஞன் பின்னர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இளைஞன் ஒன்று அல்லது இரண்டு பைகளை சுமந்திருந்ததாகவும், ஆயினும் அந்தப் பைகளுக்குள் எவ்வித வெடிபொருட்களும் இருக்கவில்லையென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இளைஞன் 'அல்லாஹு அக்பர்' என்று சத்தமிட்டதால் சுடப்பட்டாரா அல்லது தன்னைப் படையினர் சுடும்போது 'அல்லாஹு அக்பர்'' என்று சத்தமிட்டாரா என்பது பற்றிய தெளிவான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக மேலும் இருவர் பாரிஸ் விஷேட படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -