கல்முனை ஸாஹிறா கல்லூரி விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர் சொல்வது சரியா..?

ஸபா ரௌஸ் கரீம் கல்முனை -

 கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களினால் புதிய பஸ் ஒன்று வழங்கப்பட இருந்தது அதை அப்பாடசாலையின் தற்போதைய அதிபர் பதுறுதீன் தடுத்துவிட்டார் அது மாத்திரமல்ல மூன்று கோடி ரூபா பெறுமதியுள்ள கட்டடத்தையும் கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் தருவதாக முன் வந்த போது அதையும் கூட அதிபர் தடுத்துவிட்டார் என பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டன இதனால் அதிபருக்கு மக்கள் தீய வார்த்தைகளால் திட்டினார்கள்

அதிபருக்கு பின் புலமாக அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர் அதனால் தான் நிராகரிக்கின்றார் என அதிபரை மக்கள் குற்றம்சாட்டினார்கள் இந்த செய்தியை மக்கள் நம்புவதுக்கு முக்கிய காரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீன் முகப்புத்தகத்தில் இச்செய்தி பதிவிடப்பட்டது இதனால் மக்கள் அதிகமாக நம்பினார்கள்

இன்று கல்முனையில் உள்ள பிரதான இணையதளம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அப்பாடசாலையின் அதிபர் நான் பஸ்ஸை நிராகரிக்கவில்லை நல்ல எண்ணத்தை வரவேற்கின்றேன் என்றார் எதிர்காலத்தில் இதை கட்டாயம் அரசியல் வாதிகள் செய்து தரவேண்டும் என அது அவர்களின் கடமை எனவும் கூறினார்

இது தொடர்பாக அவ் இணையத்தளம் லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவர் சிராசை தொடர்பு கொண்டு கேட்டபோது நான் பஸ் தருவதாக வாக்குறுதி யாருக்கும் அளிக்கவில்லை இந்த செய்தி எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது எதிர் காலத்தில் வழங்கும் எண்ணம் உள்ளது அதை எனது சகாக்களிடம் மாத்திரமே பகிர்ந்து கொண்டேன் யாருடனும் பகிரவும் இல்லை வாக்குறுதி அளிக்கவும் இல்லை என தெளிவாக கூறினார்

மக்கள் மீண்டும் குழப்பத்தில் உள்ளனர் யாரை நம்புவது அதிபரையா அல்லது முன்னாள் முதல்வரையா அல்ல அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீனையா ?

அதிபரும் ,முன்னாள் முதல்வரும் ஒருமித்த கருத்தில் உள்ளனர் ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீன் அதிபர் நிராகரிக்கின்றார் என மீண்டும் தற்பொழுது என்னிடம் கூறினார்

அதிபரும் ,முன்னாள் முதல்வரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது அதிபர் நிராகரித்தார் என கூறுவது வேடிக்கையாகவுள்ளது அகில மக்கள் காங்கிரசின் முக்கிய பதவியில் உள்ள லங்கா அசோக் லேலண்ட் கம்பனியின் தலைவரும் முன்னாள் முதல்வர் கூறுவதும் பொய்தானா ? அதையும் பொய்யன சகோதரர் ஜுனைதீன் ஏற்றுக்கொள்வாரா?

"நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாட்டாம்" என்பது போல உங்கள் போலி கதைகள் உள்ளது உங்களால் முடிந்தால் ஏதாவது அபிவிருத்தியை மக்களுக்கு செய்து காட்டுங்கள் முடியாவிடின் பார்வையாளராக இருங்கள் அரசியலுக்காக யார்மீதும் பலி சுமத்தி கட்சியை வளர்க்க நினைக்காதீர்கள்

பாடசாலை என்பது நல்ல மாணவர்களையும், ஒழுக்கமுள்ள,பண்புள்ள சிறந்த சமூக தலைவர்களையும் உருவாக்கும் நிறுவனமாகும் அதிலும் அரசியலை நுழைக்க வேண்டாம் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் மன்றாடி கேட்கின்றேன்

ஸாஹிறா கல்லூரியின்
​ பழைய மாணவன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -