நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு சிறுக சிறுக நன்மை கிட்டுகிறது -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா்

அஷ்ரப் ஏ சமத்-

இந்த நால்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மற்றும் பிரதமா் ரணில் விக்கிரசிங்க ஆகியோா் தலைமையிலான அரசில் முன்னைய ஆட்சியினை விட இந் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு சிறுக. சிறுக சில நன்மைகள் எடுக்ப்பட்டு வருகின்றன. அதில் பாதுகாப்பு படையினா் வசம் இருந்த 36ஆயிரத்து 584 ஏக்கா் தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்திலும் இந் நகா்வு படிப்படியாக வந்து விடும். என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் ருவான் விஜயவா்த்தனவின் உரை வெள்ளவத்தையில் தெரிவித்தார்.

வடக்குக் கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளதென குறிப்பிட்ட அவர், மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த விசாரணைகள் நடைபெறுவதற்கு சிலவேளைகளில் வருடக் கணக்கில்கூட செல்லலாம். இதற்கு காலக்கெடு எதனையும் வழங்கமுடியாது.

எவ்வாறிருப்பினும், காணாமல்போனோர் விடயத்தில் வினைத்திறன்மிக்க தீர்வுகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதனடிப்படையிலேயே காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் எதிா்கட்சித் தலைவா் இரா சம்பந்தன், அமைச்சா் டி.எம். சுவாமிநாதன் ஆகியோறும் கலந்து கொண்டு கம்பன் கழக இறுதி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -