கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தடை ஆளுணரல்ல மத்திய அரசாங்கமே- முதலமைச்சர்

எம்.ஏ. கீத் திருகோணமலை-

நேற்று மாலை கிழக்கு மாகாண சபையில் ஊடவியளாளர்களின் சந்திப்பொன்று இடம் பெற்றது அங்கு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது ஆளுநரின் தலையீட்டை விட மத்திய அரசாங்கமே தடையாக உள்ளது.

மேலும் அவர் கூறும்போது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பீரிமா மா ஆலை மற்றும் டோக்கியோ சீமேந்து நிறுவனம் ஆகியவை தவிர கடந்த 30 வருடகாலத்தில் எந்தவொரு பாரிய முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை காரணம் கொழம்பில் உள்ள முதலீட்டு சபையே மற்றும் எந்தவொரு பெரிய முதலீடுகளுக்கும் முதலீட்டு சபையானது சரியான ஒத்துழைப்பையே ஊக்கவிப்போ வழங்குவது இல்லை. 

நாங்கள் தனிப்பட்ட ரீதியில் மாகாண மட்டத்தில் முதலீட்டுத்திட்டங்களை உள்வாங்கியபோதும் உதாரணமாக ஒரு உல்லாசபயணிகளின் ஹேட்டல் நிர்மாணிப்பதற்கு 17 அனுமதிகளை பெறவேண்டி உள்ளது அவ்அனுமதிகளை பெற முதலீட்டாளர் அலைந்து கலைத்துபோன சம்பவங்களே அதிகம் ஆகவே நாட்டின் முதலீட்டு சட்டம் மாற்றப்படவேண்டும் இதனால் நாங்கள் கொளரவ பிரதம மந்தரி ரனில் விக்கிரமசிங்கவிடமும் முதலீட்டு சபைக்கு பொருப்பான அமைச்சர் மலிக் சமரசிங்கவிடமும் கிழக்கு மாகாணத்திற்கு விஷேட முதலீட்டு அனுமதியை கேட்;டு உள்ளோம் எனவும் அவ்வனுமதி கிடைக்கும்பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் பல பாரிய அபிவிருத்தித்தி;டங்களை மேற்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -