தைக்காநகர் ஸஹ்றா அதிபர் அக்கரைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளராக நியமனம்.!

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
க்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம்களான, முஹம்மது அபூபக்கர் ,சுலைஹா உம்மா தம்பதிகளின் புதல்வாரன இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியாவிலும், இடைநிலைக்கல்வி, உயர்தரக் கல்வி போன்றவற்றை அக்கரைப்பற்று தேசிய பாடசாலையிலும் பெற்றுள்ளார். தனது பட்டக்கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பூர்த்தி செய்துள்ளார்.

தனது முதல் ஆசிரியர் நியமனத்தை மத்திய மாகாண கஃபேராதனை தமிழ் வித்தியாலயத்திலும் (09 வருட சேவை) முதல் அதிபர்; நியமனத்தை கண்டி தெநுஃ ஹேந்தெனிய முஸ்லிம் வித்தியாலயத்திலும் பெற்றுக்கொண்டார்.(2000-2004) 09 வருட ஆசிரியர் சேவை அனுபவத்தையும்,17 வருட அதிபர் சேவை அனுபவத்தையும் கொண்ட இவர். அதிபர் சேவை தரம் 1 ல் 9 வருட சேவை அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

அகில இலங்கை சமாதான நீதிவானாகிய இவர் மனித உரிமை அமைப்பின் அம்பாரை மாவட்ட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வித்துறை, ஊடகத்துறை, போன்றவற்றில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவைப் புர்த்தி செய்துள்ளார். இறுதியாக இவர் அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட அக்ஃஅட்ஃ ஸஹ்றா வித்தியாலயத்தில் அதிபராகச் சேவை புரிந்துள்ளார்.

கடந்த 2017.01.03.ந்திகதிய மாகாணக் கல்விச் செயலாளரின் பணிப்புரைக்கமைய நடைபெற்ற நேர்முகத்தேர்வின் அடிப்படையில் அக்கரைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளராக தெரிவுசெய்யப்பட்டு மாகாணக் கல்விச் செயலாளரின் நியமனக்கடிதப் பிரகாரம் 09.02.2017 இல் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அக்கரைப்பற்றுக் கோட்டப்பாடசாலைகளின் கல்வி மட்டத்தை மேலும் உயர்த்த தான் அதிகம் உழைக்க உள்ளதாகவும்,இந்நியமனம் கிடைக்க உதவிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்ய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -