திருக்கோவில் பாடசாலையில், பள்ளிக்கு செல்ல முஸ்லிம் ஆசிரியருக்கு அனுமதியில்லை

அம்பாரை மாவட்டம் திருகோவில் வலயத்தில் உள்ள பாடசாலையான பரமேஸ்வரா வித்தியாலயத்தில் ஒரே ஒரு முஸ்லிம் ஆசிரியராக சம்மாந்துரையைச் சேர்ந்த இர்சாத் புகாரி என்பவர் கடந்த இரண்டரை வருடங்களாக கடமையாற்றி வருகிறார். கடந்த மாதம் குறிப்பிட்ட இந்தப் பாடசாலைக்கு புதிதாக வந்திருக்கும் அதிபரால் அசெளகரியங்களை எதிர் நோக்குவதாக குறிப்பிட்ட ஆசிரியர் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்கு அழைத்து விபரங்களைக் கூறினார்.

நடந்த சம்பவம் தொடர்பில் இர்ஷாத் புகாரி ஆசிரியரிடம் கேட்டறிந்தபோது இவ்வாறு தெரிவித்தார்...
ஆசிரியர் கருத்து


இப்பிரச்சனை குறித்து சம்மந்தப்பட்ட அதிபர் கணேஷ மூர்த்தி பவனண் என்பவரிடம் இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிபர் கருத்து ‘

அதனைத் தொடர்ந்து திருக்கோவில் வலயக் உதவிக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் என்பவரை இம்போட்மிரர் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டபோது குறிப்பிட்ட சம்பவம் எனக்கும் அறிவிக்கப்பட்டது ஆனால் நீங்கள் வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு சரியான தகவல்களைக் கேட்டறியுமாறு தெரிவித்தார்.

அதன் பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகீர்தராஜன் அவர்களை இம்போட்மிரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறு

தெரிவித்தார்: குறித்த பாடசாலைக்கு புதிதாக வந்திருக்கும் அதிபரால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக நேற்று எனக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிக வேலைகள் காரணமாக அதனைப் பார்வையிட எனக்கு நேரம் போதாமல் இருந்தது எனவே குறித்த பிரச்ச்சனை தொடர்பில் நான் சரியான நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.


தொடர்ந்தும் பேசிய வலயக் கல்விப் பணிப்பாளர் திருக்கோவில் வலயம் கல்வியில் முன்னேறிக்கொண்டு வரும் ஒரு வலயம் இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் எந்தப்பிரச்சனையும் செய்யவில்லை ஆனால் இங்கு நடந்திருப்பது தவறு என்று நான் உணர்கிறேன் இதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேர்கொள்வேன் என்று தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் செல்லலாம் என்பதற்கான அரசாங்க நிர்வாகச் சட்டமூலம்...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -