கிழக்கில் பாடசாலைகளுக்கு நிதி இல்லை? வெண்கட்டிகூட வாங்கமுடியாத நிலை

காரைதீவு நிருபர் சகா-

கிழக்கிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு கடந்த வருடம் வழங்கப்படவேண்டிய நிதி(Quality Input - – குணநல உள்ளீடு) இன்னும் வழங்கப்படவில்லை. கடந்தவருடம் அரசநிதி எதுவும் வழங்கப்படவில்லை.இதனால் பாடசாலைகள் செலவுக்கு திண்டாடுவதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்நிதியை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தகவல் தருகையில்:

பாடசாலைகளின் தரம் மாணவர் தொகைக்கேற்ப வருடாவருடம் பாடசாலைகளுக்கு ஒரு தொகை நிதி குணநல உள்ளீட்டு நிதியாக வழங்கப்பட்டுவருவது சகலரும் அறிந்ததே. அந்த நிதியிலேதான் பாடசாலைக்குத்தேவையான முக்கியமான வரையறுக்கப்பட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இந்த நிதி 2015இல் 42வீதம் வழங்கப்பட்டது. 2016இல் அதாவது கடந்த வருடம் அந்நிதி வழங்கப்படவே இல்லை. இவ்வருடம் இன்னுமில்லை.

கடந்தவருடத்திற்கான அந்த நிதி இன்னும் வழங்கப்படாததால் சில பாடசாலைகள் வெண்கட்டிகூட வாங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாடசாலை அபிவிருத்திச்சங்கக்கூட்டங்களில் அதிபர்கள் இதனை பகிரங்கமாகவே தெரிவிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் சிலர் முன்வந்து இவற்றைவாங்கிக்கொடுக்க முன்வந்தபோதிலும் கல்வியமைச்சின் சட்டங்கள் தடையாவுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் எந்த அரசநிதியும் கிடைக்கப்பெறவில்லை என அதிபர்கள் முறையிடுகின்றனர்..அதுபோல யுனிசெவ் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இந்த குணநல உள்ளீட்டு நிதியை காலதாமதமின்றி பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனத் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கிழக்குமாகாண கல்வியமைச்சர் ஆகியோரைத் தொடர்புகொண்டபோதிலும் பலனளிக்கவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -