வெலிமடை மக்களது சமகால பிரச்சினைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடல்



புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதுளை- வெலிமடை பகுதிக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார். அத்துடன், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதி ஒதுக்கீட்டில் போகஹகும்புர ஜும்மா பள்ளி நிர்மாணப் பணிகளுக்காக 10 இலட்சம் ரூபா நிதியினையும் இதன் போது வழங்கி வைத்தார். 
 
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வெலிமடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துiராயாடினார். 

இதன்போது, வெலிமடை – போகஹகும்புர நகரில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் அப்பள்ளிவாசலின் குறைபாடுகளை கேட்டறிந்ததுடன், பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதி ஒதுக்கீட்டில் பத்து இலட்சம் ரூபாவினை வழங்கி வைத்தார். 

அத்துடன், பதுளை மாவட்ட ஜனாஸா நலன்புரிச்சங்கம், போகஹகும்புர அரபுக் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்களுடைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன் போது கேட்டறிந்த இராஜாங்க அமைச்சர் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தார். 
 
விசேடமாக, வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு மிக நீண்டகாலமாக இருந்து வருகின்ற ஒரு காணிப் பிரச்சினை தொடர்பிலும், அக்காணியை கொடுப்பதற்கு பேரினாவ சக்திகள் தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து வருவதானால் அங்கு கட்டிடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தலைமையிலான குழு இராஜாங்க அமைச்சரிடம் முறையிட்டு தீர்வினைப் பெற்றுத் தருமாறும் வலியுறுத்தியது. 

இந்த விடயம் தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோருடன் தான் கலந்துரையாடி விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதன் போது உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -