வேண்டாம் காட்டூன்
------------------------------------
மரணம் எப்படி வரும்
அறிந்தவரிலர்
மரணம் எப்போது வரும்
தெரிந்தவரிலர்
ஆனாலும்
ஒவ்வொரு மரணமும்
படிப்பினை தரும்.
பெற்றோர்களே!
பால்குடி மாறா
பச்சிளம் குழந்தை கூட
பாலுக்காக அழுதாலென்ன
சும்மா அழுதாலென்ன
ஏனோ அழுதாலென்ன
காட்டுகிறோம் காட்டூன்
அழுகை அடங்கி
அடிமைப்படுகிறது அதற்கு.
காட்டூனை கண்டறிந்தவன்
தன் நாட்டில் தடுத்திட்டான்
பிற நாட்டில் தந்திட்டான்
அவன் சேய்களை காத்திட்டான்
பிறர் சேய்களை அழித்திட்டான்.
தினமொரு செய்தி கூடவே
தருகிறது வேதனை
ஏனிந்த சோதனை
செய்திடுவீர் போதனை
வேண்டாமந்த காட்டூன்.
காசு கொடுத்து வாங்குவது
காட்டூன் உம் பார்வையில்
கழுத்தில் கத்தி எம் பார்வையில்
காத்திடுவோம் நம் செல்வங்களை.
பெற்றோர்களே!
வேண்டாமந்த காட்டூன்
போனிலென்ன ரீவிலென்ன
கொம்பியூட்டரிலென்ன
தடுத்திடுவோம் அத்தனையும்
ஒலிக்க வைப்போம் குர்ஆனை
நினைக்க வைப்போம் படைத்தோனை.
குறிப்பு:
காற்றில் வந்த செய்தி
பயணத்தில் இருந்த என்னை
உசுப்பி விட்டதால்
கிறுக்கி விட்டது.
வைத்திய கலாநிதி என்.ஆரிப் அவர்களது முகநூலில் இருந்து...