மாணவர்களை பலிக்கடாவாக்க வேண்டாம்: கிழக்கு கல்வி அமைச்சர்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
மாணவர்களை போராட்டங்களில் இறக்கி பலிக்கடாவாக்குதல் மூலமும் ஆசிரியர்கள் சுகயின விடுமுறைகளை எடுத்து ஒரு போராட்டங்களில் இடுபடுவதென்பது நாம் யாருக்காகா பாடுபடுகின்றோமோ அந்த மாணவர்களையே மீண்டும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இன்று (21) மூதூர் பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை பெற்று கல்வி அமைச்சிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இதில் குறித்த சில ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அகியோருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் பின் ஊடகங்களக்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சி.தண்டயுதபாணி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்துக் கூறுகையில்;

மூதூர் வலயக் கல்வி பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறும் இடமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் பல்வேறு தரப்பினரால் பல விதமான முறைப்பாடுகளும் கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளது. அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் குற்றச் சாட்டாக தெரிவிகப்படுவது அவர் ஆசிரியர்களுடன் கடுமையாக நடந்து கொள்கிறார் கடும் சொற்களால் பேசுகிறார்.இவ்வாறான குற்றச் சாட்டுக்களே காணப்படுகிறது .

மூதூரின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு காணப்படும் இத்தருணத்தில் இவ்வாறான ஒர் அதிகாரி நிர்வாகத்தில் இறுக்கமாக இருப்பது வரவேற்றத்தக்கது மேலும் பாடசாலைகளுக்கான மேற்பார்வையிலும் அவர் அடிக்கடி ஈடுபடுவதாகவும் தெரிய வருகிறது.எனவே இவரை இடமாற்றம் செய்யவது தொடர்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் சிறிது சிந்திக்க வேண்டும் என தாம் கேட்டுக் கொள்வதாக தெரிவிததார்.

மேலும் அவர் கடுமையாக நடந்து கொள்வது தொடர்பாக எவரும் பாதிக்கபடக் கூடாது அந்த விடயம் தொடர்பாக விசாரிக்கபட்டு அதற்கான நடவடிக்கையை அவர் மீது மேற் கொள்வது தொடர்பாக விடயங்களை செய்வோம் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -