கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பஷீர் சேகு தாவூத் உடனடியாக நீக்கப்பட்டார் - உயர்பீடம் அதிரடி முடிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் இன்று 04.02.2017 இரவு 7.30 மணிக்கு கட்சித் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடியது.

கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி உரிய நேரத்துக்கே உயர்பீடத்துக்கு சமூகமளித்திருந்தார்.

ஆனால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள சீடிக்களை வெளியாக்கவிருக்கும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் உயர்பீடத்துக்கு சமூகமளிக்க வில்லை.

ஆனால் உயர்பீட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய தலைமைக்கும் கட்சிக்கும் அவதூறினைப் பரப்பிக்கொண்டிருக்கும் தவிசாளரை உடனடியாக கட்சியில் இருந்தும் தவிசாளர் பதவியில் இருந்தும் நீக்கவேண்டும் என்று உயர்பீட உறுப்பினர்கள் ஒருமித்து கோரிக்கை விட்டதன் பயனாக  இன்றிலிருந்து ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸ் தவிசாளர் பதவியில் இருந்து பஷீர் சேகு தாவூத் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் 11.02.2017 மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -