தலைவர் ஹக்கீமின் சாரதியாக இருந்து சதிகள் பல செய்து பதவி பெற்ற அமீர் அலி- மூத்த போராளி மன்சூர்


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அதிகாரங்களையும் மக்கள் முன் முகவரியும் பெற்றுக்கொண்டவர்கள் இன்று அக்கட்சியைப்பற்றி விமர்சித்துத் திரிகின்றனர். இவர்களின் போலி முகங்களை மக்கள் சரியாக அறிந்து கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த போராளி ஓட்டமாவடி சாட்டோ மன்சூர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:

அன்று கல்குடாவின் முஸ்லிம் காங்கிரசின் முதலாவது அரசியல் பிரவேசத்தின் கிடைத்த பாராளுமன்ர உறுப்பினரும் பிரதி அமைச்சருமான மர்ஹூம் முகையதீன் அப்துல் காதர் அவர்களுடைய ஏராளமான நல்ல செயற்பாடுகளை விமர்சித்து அரசியலுக்குள் நுளைந்த அமீர் அலி

மர்ஹூம் முகையதீன் அப்துல் காதிர் விட்ட இடத்தில் இருந்து பலசேவைகளைச் செய்வேன் என்று அரசியலுக்குள் நுளைந்து இரு முறை பிரதி அமைச்சர்களாக இருந்து இதுவரை வாழைச்சேனை மத்திக்கான பிரதேச சபையைப் பெற்றுக்கொடுக்க வக்கற்றவராக இருக்கிறார். கல்குடா மக்களின் முக்கிய தேவையான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முதுகெலும்பற்றவராக இருக்கும் அமீர் அலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பற்றி குறை கூற வருகிறார்.

ஓட்டமாவடி இழந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளையும் இணைத்துத் தருவதாக கூவித்திருந்த அமீர் அலி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உலாவருவது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து வைத்திருப்பதுபோல் தெரிகிறது. கல்குடா மக்கள் விரும்பும் அல்லது கட்டாயமாக எதிர்பார்க்கும் எந்தச் சேவையையும் இதுவரை அமீர் அலி செய்ய வில்லை. தனது பெயரைச் சூட்டவும், கொமிசன் கொள்ளையடிக்கவும் பழகிய அரசியல்வாதியான அமீர் அலி ஒரு நாளாவது கல்குடா மக்களைப் பற்றி பாராளுமன்ரத்தில் பேசியிருப்பாரா.. என்று கேட்க விரும்புகிறேன்.

தனது அரசியலை வளர்க்கவும் ஹக்கீமைக் காக்காப் பிடிக்கவும் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாரதியை விலக்கி விட்டு அமீர் அலியே சாரதியாக வாகனத்தை ஓட்டிய அன்று 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கல்குடா பிறந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் தலைவர் ஹக்கீம் கலந்து கொண்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அன்று வேட்பாளர்களில் ஒருவராக இருந்த அமீர் அலி உரையாற்றும்போது நான் இந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை விட்டு விலகுவேனாக இருந்தால் எனது தாயுடன் ஸினாச் செய்த பாவியாவேன் என்று அடித்துக்கூறினார். இதற்கு அங்கு திரண்டு நின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சி பகர்வர்.

இப்படியான நிலமைகளில் தன் தாயுடன் ஸினாச் செய்யவும் தயாரான அமீர் அலி போன்றவர்கள் கட்சியில் முகவரி பெற்று பதவிகளையும் தனதாக்கி 41 நாட்களில் கட்சியை விட்டு கட்சிக்கும் மக்களும் துரோகம் செய்து விலகிச் சென்ற அமீர் அலி இன்று கட்சியை தூசிக்கின்றார். இவரின் இந்த இழிநிலையை யாரிடம் எடுத்துச் சொல்ல.

அன்று கல்குடாத் தொகுதி முன்னனிப் போராளிகள் யாரும் அமீர் அலியை வேட்பாளராக நிறுத்த விரும்பாதபோதும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் காலைப்பிடித்து குடும்ப உறவுகள் அனைவரும் மடிப்பிச்சை கேட்டு எடுத்த பதவியில் வந்திருக்கும் அமீர் அலி மேடைகளில் வாய்திறந்து வெட்கம் கெட்டு கோஷமிடுவது வேடிக்கையாகவும் கேவலமாகவும் இருக்கிறது.

அது மாத்திரமல்லாது அன்று கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் துரோகம் செய்து அற்ப பணத்தாசைக்காக மகிந்தவின் அழைப்பில் சந்திரிக்காவுடன் இணைந்த அமீர் அலி, ரிஷாத் பதியுதீன், ஹுஷைன் பைலா, நஜீப் ஏ மஜீட் ஆகியோர் நான்கு பேரும் நான்கு மாவட்ட அபிவிருத்தி அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ஹுசைன் பைலா பிரதி அமைச்சர்)

அதுபோல் நகைச் சுவை நடிகர் வடிவேல் கிணறுகளைக் காணவில்லை என்று கூறுவது போல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப் பட்ட அமீர் அலியின் சேவைகளான கல்குடாத் தொகுதியில் நீர் தடுப்பு அணைக்கட்டுக்கள், வாய்க்கால்கள், சிறிய குழங்கள், புதிய வீதிகள் இப்படியான வேலைகளுக்கான பணங்கள் பெறப்பட்டு வேலைகள் நடைபெறாமல் இருந்தமையும் அதனால் பாதிப்படைந்த விவசாயிகள் தட்டிக்கேட்டபோது இராணுவத்தை அழைத்து அச்சுறுத்தி சுட்டுத்தள்ளிய நிலமையும் எடுத்துக்காட்ட வேண்டியவையாகும்.

அமீர் அலியின் அன்றய கொடூரத்தால் சியாம் பொலிஸ், சிஹாப்தீன் செயலாளர், சாடோ மன்சூர் ஆகியோரின் வீடுகளுக்கு சுட்டு அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். உடல் உழவியல், சமூகவியல் ரீதியில் மிகமோசமாக இவர்கள் அமீர் அலியினால் பாதிக்கப்பட்டனர். அதுமாத்திரமல்லாமல் ஏறாவூர் கேணல் லத்தீப், எல்.ரி.ரி.புகாரி, ஒரு முஸ்லிம் பெண் ஆகியோர் அன்று அமீர் அலியின் ஆதரவுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது நானே சாட்சி என்னுடன் பலரும் சாடியாக உள்ளனர். இப்படியான கொடூரங்களைச் செய்த அமீர் அலி ஒரு சமூகத்தைப் பற்றி சிந்திப்பவரா.. மக்களை முட்டாள்களாக்கும் பணியில் இறங்கியுள்ள கொலை காறக்கூட்டமான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்வோர் எப்படி மனிதாபிமானிகளாக இருக்க முடியும். என்பதனை அவர்களை முன்னோக்கி கேட்க விரும்புகிறேன்.

அதுமாத்திரமல்லாமல் ஊடகவியலாளர் ஓட்டமாவடி இர்சாத்தின் மூத்த சகோதரர் டாக்டர் அஜ்வத்தின் காருக்கு குண்டு வைத்துத் தகர்த்தார்கள் ஆனால் டாக்டர் அஜ்வத் மயிரிழையில் உயிர்தப்பினார். அதன் வழக்கு ஆதாரம் இன்னும் இருக்கிறது. அடுத்து ஓட்டமாவடி ஹனீபா ஹாஜியாரின்

வீட்டுக்கு குண்டு வைத்து தாக்கினர் இதில் ஹாஜியார் மயிரிளையில் தப்பினார். பல உண்மைப் போராளிகளை தேடித் தேடிச் சுட்டனர். இப்படியான கொடூரங்கள் இன்னும் ஏராளம் இருக்கிறது. காலம் வரும்போது அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரவிருக்கிறேன்.

சாட்டோ மன்சூர்
ஓட்டமாவடி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -