அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-மரத்தடி சந்தியிலுள்ள கிருஷ்ணனன் கோயில் களஞ்சியசாலைக்குள் இன்று (15) நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
எஸ் எப் ஜீ 57 என்ற கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் கோயில் களஞ்சியசாலையை துப்பரவு செய்யும் போது பாவிக்க கூடிய விதத்தில் பசலை உரையில் வைக்கப்ட்டிருந்த நிலையில் மீடகப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட நான்கு கைக்குண்டுகளையும் திருகோணமலை நீதிமன்ற உத்தரவின் பேரில் செயலிழக்க செய்வதற்காக விஷேட அதிரடிப்படையினர் கொண்டு சென்றுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.