அபு அலா -
வூஸ்ட் நிறுவனத்தின் அனுசரணையில் சுவாட் நிறுவனம் நடாத்திய அம்பாறை மாவட்ட கரையோர இளைஞர் யுவதிகளுக்கான இருநாள் பயிற்சிப் பட்டறையின் இறுதிநாள் நிகழ்வும், சான்றிதழ் வழங்கி வைப்பும் இன்று (19) தம்பட்டை சுவாட் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யு.எம்.வாஹிட், இணைப்புச் செயலாளர்களான அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமில் காரியப்பர், அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரங்களில் கல்வியை பயின்றுவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருந்த இளைஞர், யுவதிகளுக்கான இருநாள் தொழில் பயிற்சி நெறியில் 185 பேர் கலந்துகொண்டனர். இதில் 120 இளைஞர்களும், 65 யுவதிகளும் பங்குபற்றி இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்திருந்தனர்.
இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அனைத்து இளைஞர், யுவதிகளும் தனியார் துறைகளில் தங்களின் தொழில் வசதிகளை மிக இலகுவில் பெற்றுகொள்ள முடியும். அத்துடன் இச்சான்றிதழ்கள் மிகப் பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்து காணப்படுகின்றது.
இந்த தழிழ் மூல பயிற்சி நெறியில் 60 வீதமான முஸ்லிம் இளைஞர், யுவதிகளும், 40 வீதமான தழிழ் இளைஞர், யுவதிகளுமே பங்குபற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இச்சான்றிதழ்களை பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.