ஏக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு

ஐ.ஏ.காதிர் கான்-
"கொழும்பில் உள்ள குப்பைகளை ஏக்கல பகுதிக்கு கொண்டு வரவேண்டாம்" எனத் தெரிவித்து, ஜா-எல ஏக்கல மடம சந்தியில், இன்று (09) வியாழக் கிழமை காலை முதல், ஏக்கல பிரதேச மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில் ஜா-எல ஏக்கல மடம சந்திப் பகுதியில் பாதையை இடை மறைத்து, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஜா-எல முதல் மினுவாங்கொடை வரையில் வீதிப் போக்குவரத்தும் காலை வேளையில் முற்றிலும் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு, பாரியளவில் மேலதிக போக்குவரத்துப் பொலிஸாரும் வர வழைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, சீதுவ, ஜா-எல, கந்தானை, வத்தளை, பேலியகொடை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும் மேலதிக சேவைக்காக ஆர்ப்பாட்ட இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -