தகவலறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் அமுலில்..!

ரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -