ரணிலுக்கு டாக்டர் பட்டம்: அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் வழங்கியது!

எஸ். ஹமீத்-
அவுஸ்திரேலியாவின் டேய்கின் (Deakin University) பல்கலைக் கழகத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முரண்பாடு மற்றும் வன்முறையான சூழலிலிருந்து நாட்டை ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்லும் பிரதமரைக் கௌரவிக்கும் நோக்கிலேயே இந்தக் கலாநிதி பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 65000 ற்கு மேற்பட்ட உயர் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்டது டேய்கின் பல்கலைக் கழகம். 1974 ம் ஆண்டு நிறுவப்பட்ட இப் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியாவின் கீலோங்கில் இருக்கிறது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாரியார் சகிதம் நேற்று அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -