கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சரின் பதில்..!

சப்னி அஹமட், அபு அலா -
டந்த 2016.11.23 ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண அமைச்சர் வாரியக்கூட்டத்துல் வான் எல மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரை வாரியம் சிபாரிசினை வழங்கியுள்ளது. அதற்கமைவாக மத்திய அரசின் சுகாதார அமைச்சுக்கு இது குறித்த அமைச்சரை பத்திரம் தொடர்பாகவும் இதனை தரமுயர்த்துவது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 73வது சபை அமர்வு நேற்று (21) இடம்பெற்றது. இச்சபையின் தொடர் மதிய இடைவேளைக்குப் பிறகு கூடியபோது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இல்லாது போனதால் இச்சபையின் நடவடிக்கைகளை பிரதித் தவிசாளரினால் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது நாளாக இன்று (22) தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் இச்சபையின் நடவடிக்கை ஆரம்பமானது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பீ.எல். அருண சிரிசேனவினால், 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக கந்தளாய் வானெல மத்திய மருந்தகமாக இயங்கிவரும் 07 கிராம சேவையாளர் பிரிவுகளையும் ஏறத்தாழ 6000குடும்பங்களையும், 15000பேருக்கு நன்மை அளிக்கும் இந்த மருந்தகத்திற்கு அண்மையில் இருப்பது கந்தளாய் மற்றும் கிண்ணியா வைத்தியசாலையாகும். இவை இரண்டிற்கும் செல்லவிருக்கும் தூரம், ஏறத்தாழ 18கி.மீ ஆகும் இதன் காரணமாக இந்த மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாகத் தரமுயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கேள்வி எழுப்பினார். 

மாகாண சபை உறுப்பினர் பீ.எல்.அருண சிரிசேனாவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு பதிலளித்தார். 

அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

கடந்த 30 வருட காலமாக கந்தளாய் வானல மத்திய மருந்தகத்தினை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து வேலைகளும் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

குறித்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு பலவகையான வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றது. அதை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அனைத்நது நடவடிக்கைகளையும் மேற்ககொண்டுள்ளதுடன், குறித்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு மத்திய அரசின் பதிலையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -