வீதி அபிவிருத்தியால் சேதமான இ.கி.மிசன் மதில்?




காரைதீவு நிருபர் சகா-

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கான வீதி அபிவிருத்தி வேலைகளின்போது காரைதீவு இராமகிருஸ்ணமிசன் சாரதா சிறுமியர் இலல் மதில் சேதமாக்கப்பட்டுள்ளது.

வீதியில் தார் ஊற்றுவதற்காக தார்ப்பீப்பாவை கொதிக்கவைத்தபோது இம்மதில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
தார்ப்பீப்பாவை மிசன் மதில் ஓரத்தில்வைத்து எரியூட்டிஉள்ளனர். இதனால் மதில் வெடித்ததுடன் சுவர் பூச்சும் வெடித்து வீழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்திடம் முறையிடப்பட்டுள்ளது.

இ.கி.மி.இல்லப்பொறுப்பாளர் திருமதி கமலநாயகியிடம் இச்சம்பவம் பற்றிக்கேட்டபோது
தார்ப்பீப்பா எரியவைத்தது தொடர்பில் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. எமது பிரதான வாயிலுக்கு முன்னால் கொங்கிறீட் மேடையொன்று ஏனையோர்க்கு அமைத்துக்கொடுத்தவாறு எமக்கும் அமைத்துத்தருமாறு கேட்பதற்காக வீதிக்குவந்தபோதுதான் இக்காட்சியைப்பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.

அவர்களிடம் உடனடியாக சென்று நிறுத்துமாறு கேட்டேன். அவர்கள் அதனை மதியாது எரியூட்டினார்கள். நான் செய்வதறியாது பிரதேச செயலகத்திற்கு முறையிட்டேன். மதில் சேதமாக்கப்பட்டுள்ளது. என்றார்.

முன்வீட்லுள்ள முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கு.மகாலிங்கசிவம் கூறுகையில் இம்மதில் சேதமாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. அநாதைப்பிள்ளைகள் வாழும் இடம் இது. எனவே இதனை உடனடியாகத் திருத்தி முன்பிருந்ததுபோது செய்யவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -