வெலம்பொட பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வுகான அமைச்சர் ஹக்கீம் நேரடி விஜயம்.!

ண்டி மாவட்டம் - உடுநுவர, வெலம்பொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிவாசலில் மினாரா கட்டுவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படாதுள்ள இந்தப் பள்ளிவாசலுக்கு, பெரும்பான்மையின மக்கள் பல்வேறு வகைகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் (18) இப்பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், முதற்கட்டமாக பள்ளிவாசலை பதிவுசெய்ய நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -