ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் பழைய மாணவர் சங்கமும்.!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கம் நடாத்தி வரும் பழைய மாணவர்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போடியில் அதிகளவிலான பழைய மாணவர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொள்கின்றமையானதை பார்கின்ற பொழுது தற்பொழுது பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருக்கின்ற பழைய மாணவர் சங்க நிருவாகமும், சங்கமும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது என வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பனிப்பாளரும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் பழைமாணவர் சங்கத்தில் முக்கிய உறுப்பினராக கடமையாற்றி வரும் எஸ்.ஏ.எம்.றியாஸ் (ADP) தெரிவிக்கின்றார்.

மேலும் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப் போட்டி ஒன்று நேற்று 11.02.2017 சணிக்கிழமை காலை 7:30 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் OBA யின் பிரதித்தலைவர் SAM. றியாஸ் (ADP) தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி அஷ்ஷெய்க் MMS. ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் கலந்து கொண்டதுடன், எம்.எல்.ஏ. ஜூனைட் (DEO), ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ. ஹலீம் இஸ்ஹாக், அல்ஹாஜ் ஏ.எம்.ஏ. காதர் (Rtd,DEO), முன்னால் அதிபர் எம்.சி.எச். முஹம்மட், அல்-கிம்மாவின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர், ஏ.சி.எம். நியாஸ் ஹாஜியார் அகீல் டயர் சொப், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் 16 அணிகளைக் கொண்ட பழைய மாணவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றி 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -