கிழக்கு மண்ணின் புகைப்படப்பிடிப்பாளராக சாதிக்கும் சம்மாந்துறை பிரோஸ்.!

லங்கையில் வளர்ந்து வரும் கிழக்கு மண்ணின் புகைப்படப்பிடிப்பாளர் சம்மாந்துறையைச் சேர்ந்த பிரோஸ். இவர் எமது கிழக்கு மண்ணின் மண் வாசனையை மிகவும் தத்துரூபமாக அவரது காமராவினுடாக காண்பிக்கின்றார். இவரது அண்மைக்கால புகைப்படங்கள் வெகுவாகவே மக்களைக் கவர்ந்துள்ளதுடன் மிகவும் கலைத்துவமிக்கதாய் இம்மண்ணின் பெருமைகளை வெளிக்காட்டுகின்றது என்றால் மிகையாகாது. 

தன் கலை தன்னோடு மட்டும் நின்றுவிடாமல் இத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் இதனை பயிற்றுவித்தும் வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர் கடந்த வருடம் தேசிய விருதுபெற்ற கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு புகைப்படக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரிடம் தொடர்பு கொண்டு உங்களின் புகைப்படத்தின் இரகசியம் என்ன..? என்று வினவிய போது;

"அனைவருக்கும் ஒரு கனவு இலட்சியம் இருக்கும். அது புகைப்படமே எனக்கு. அதன் பிரதிபலிப்பே இவை ... என்னைப் பொறுத்தவரை புகைப்படம் என்ற ஒன்று அழகிற்காய் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை அதையும் தாண்டி ஆத்மார்த்தமான உயிரோட்டமான ஏதோ ஒரு செய்தி அதற்குள் இருக்கிறது.. இருக்கவும் வேண்டும். அவ்வாறு இருப்பின் என்றும் எம் புகைப்படம் உயிரோடு இருக்கும் எனக் கூறினார். 

இவரது இவ்வாறான விலை மதிக்கமுடியாத கலையை என்றும் நாம் தட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறான ஒரு பெறுமதியான ஒரு திறமையுள்ள கலைஞரை நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுளோம். முடிந்தால் இதனை அதிகம் சேர் செய்து நீங்களும் இவரைன் திறமையை உலகரியச் செய்து இவரை வாழ்த்தி இவரின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாமே.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -