பழுலுல்லாஹ் பர்ஹான்-
புனரமைக்கப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.எம்.சபி தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
விளையாட்டு மைதான மீள் திறப்பு விழா நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பிவெதகெதர உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும், விளையாட்டு மைதான மீள் திறப்பு விழாவை முன்னிட்டு மின்னொளியுடன் கூடிய இரவு நேர 1 கடின பந்தாட்ட போட்டியும், 4 உதைப் பந்தாட்ட போட்டிகளும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.