இறுதிச் சடங்குக்கு முன்னம் உயிர் பெற்ற இளைஞன்..!

எஸ்.ஹமீத்-
ந்த இளைஞனுக்கு வயது 17 . பெயர் குமார் மாரிவாட். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தார்வாட் பிரதேசத்தின் மானக்கேண்டி கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு மாதத்தின் முன்பு குமாரை வெறி நாய் கடித்துவிட்டது. ஆபத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குமாருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அத்தோடு அவரது உடல் முழுவதும் விஷம் பரவி விட்டது.

சிகிச்சை செய்த டாக்டர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். குமாரை இனித் தம்மால் காப்பாற்ற முடியாது என்று சொல்லி அவரை வீட்டுக்கு எடுத்துப் போகச் சொல்லிவிட்டனர்.

வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட குமாரின் நிலைமை ஓரிரு நாட்களில் மேலும் மோசமாகியது. கடந்த வார இறுதியில் குமாரின் உடலசைவும் மூச்சும் முற்றாக நின்று போனது. எனவே அவர் இறந்து விட்டதாகக் கருதி பெற்றோரும் மற்றோரும் இறுதிக் கிரியைகளுக்குத் தயாராகினர்.

நேற்று குமாரை அடக்கம் செய்வதற்காகவோ அல்லது தகனம் செய்வதற்காகவோ அவர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் குமாரின் உடலில் அசைவு தெரிவதைக் கண்டனர். ஆமாம்...குமாரின் கால்களும் கைகளும் அசைந்ததோடு, அவர் தன் கண்ணையும் திறந்து பார்த்தார். உடனே மயானத்துக்குச் செல்வதைக் கைவிட்டு, அப்படியே அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் உறவினர்கள். தற்போது குமார் ஆஸ்பத்திரியில் திரும்பவும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -