நாட்டில் இன ரீதியான செயற்பாடுகள் அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணம் அரசியல் பின்னனிகளாகும் - ஷிப்லி பாறுக்

ஹைதர் அலி-
காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றம் ஆகியவை இணைந்து நடாத்திய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுதந்திர தின விழாவும் மாபெரும் இரத்ததான நிகழ்வும் 2017.02.04ஆந்திகதி - சனிக்கிழமை (இன்று) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் TM. ஜவ்பர்கான், காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ்சின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை, காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா மற்றும் இராணுவ வீரர்கள், காத்தான்குடி நகரசபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...

எமது நாடு கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்திருந்த போதிலும் அன்று தொடக்கம் இன்று வரை இந்த நாட்டின் மூவினங்களுக்குமாக சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் என்பன சிக்கல் தன்மை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இன்று எமது நாட்டில் இன ரீதியான செயற்பாடுகள் அதிகரித்திருப்பதற்கான பிரதான காரணம் அரசியல் பின்னனிகளாகும். 

கடந்த அரசாங்கமானது தனது ஆட்சியினை தக்க வைத்துக்கொள்வதற்காக பெரும்பான்மை சமூகத்தினூடாக சிறுபான்மை மக்களுக்கெதிரான மிக கொடுரமான இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்தவேலை இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலம் இந்நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை ஏற்படுத்தி இருந்த போதிலும் கடந்த கால ஆட்சிக்காலத்தில் தூண்டிவிடப்பட்ட இனவாத செயற்பாடுகள் இந்த நல்லாட்சியிலும் தொடர்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

மூவின மக்களும் இணைந்ததாக பெற்றெடுத்த இந்த சுதந்திர நாட்டில் இன ஒற்றுமையினையும் சகவாழ்வினையும் கட்டியெழுப்ப நாம் என்ன செய்திருக்கின்றோம் என்று சிந்திக்க வேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. வெறுமனே எமது பேச்சுக்களினாலோ அல்லது சண்டை பிடிப்பதினாலோ இன ஒற்றுமையினை ஏற்படுத்திவிட முடியாது. மாறாக எமது செயற்பாடுகளின் மூலமாக நாம் ஒற்றுமையினை கட்டியெழுப்ப வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் உள்ள தப்பான அபிப்பிராயங்களை எமது நற்பண்புகளின் மூலமாக மாற்றியமைக்க வேண்டும்.

நாம் பிறந்தது முதல் இந்த நாட்டிற்காக நாம் செய்த பங்களிப்புக்களை விட அதிகமான பிரதிபலன்களை இந்நாடு எமக்கு கொடுத்திருக்கின்றது. இலவச கல்வி, இலவச மருத்துவம் மற்றும் இலவச உயர்கல்வி என்று பல்வேறு விடயங்களை இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் நாம் இலவசமாக அனுபவித்து வருகின்றோம். இத்தகைய எமது சுதந்திர நாட்டில் இன ஐக்கியத்தினையும் சகவாழ்வினையும் கட்டியெளுப்புவதன் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தினை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என தனது உரையில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் 69 சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் இரத்ததான முகாமினையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்தும் வைத்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -