தனது எஜமானிடம் மீண்டும் சரணடைந்தாரா முன்னாள் அமைச்சர் அதாவுல்லா

டந்த 07 -02 -2017 செவ்வாய்க்கிழமை அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லமான கொழும்பு விஜயராமையில் இருவரும் சந்தித்து பேசியதாக பல பிரதான இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன

இதனால் மக்கள் மீண்டும் அமைச்சர் மீது கொந்தளிக்கின்றனர் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்ததன் காரணமாக கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியில் எமது இறை இல்லங்களை உடைத்து ,எம் சகோதரர்களை கொன்றுகுவித்தது ,எமது சொத்துக்களை தீயிற்று கொளுத்தியதை நீங்களும் ,ஒரு சில முஸ்லிம் தலைவர்களும் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வேடிக்கை பார்த்ததை மக்கள் மறக்கவில்லை

பதவி ஆசை யாரையும் விடாது இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர ஆசைப்படுகின்றார் அதன் காரணமாக முஸ்லிம் தலைவர்களை அழைத்து இனி ஒரு போதும் எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இனி எந்த அநீதியும் வரமாட்டாது என்னுடன் இணையுமாறு அழைப்புவிடுகின்றார்

முன்னாள் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்பினர் அஸ்வர் கூட மஹிந்தவோடு இணையுங்கள் என மக்களையும் அரசியல் வாதிகளையும் அழைக்கின்றார் காரணம் முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் ஏதாவது பெரிய பதவி தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசையில் அழைக்கின்றார் இது மிகவும் வேதனை அளிக்கின்றது

நல்லாட்சியில் ஒரு சில சம்பவங்கள் நடக்கின்றன அது தொடருமாக இருந்தால் எம்மிடம் இருக்கும் பெரும் ஆயுதமான துஆவினால் அல்லாஹ்விடம் மன்றாடி கடந்த ஆட்சியை தோற்கடித்தது போல இந்த ஆட்சியையும் தோற்கடிப்போம் '

இவர்களின் பதவிகளுக்கும் , பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் தன்மானமுள்ள முஸ்லிம் தலைவன் என்பதை அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் உணர்த்தவேண்டும்

ஸபா ரௌஸ் கரீம்
கல்முனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -