முன்னாள் தவிசாளரின் சொத்து விபரங்களை வெளிக் கொண்டுவர தவம் நடவடிக்கை - அச்சத்தில் பஷீர்

ஏ.எல்.றமீஸ்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூதின் சொத்து விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்,தேர்தல் ஆணையாளர் மற்றும் வருமான வரித் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பஷீர் சேகுதாவூத் தனது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்தின் போது பாராளுமன்ற செயலகத்திற்கும் தோ்தல் திணைக்கத்திற்கும் ஏற்கனவே தனது சொத்து விபரங்களை சமர்ப்பித்திருந்தார்.

பஷிரால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விபரத்தில் வருமானம் மீட்டும் முதலீடுகளோ,அசையும் அசையா சொத்துக்களோ,வங்கி மீதிகளோ அவரினால் குறிப்பிடப்படவில்லை அத்தோடு பாராளுமன்ற உறுப்பினருக்கான மாதாந்த சம்பளத்தில்தான் தனது வாழ்க்கையை நடாத்தி வந்தார்.

இருந்த போதும் அதற்கு பிற்பட்ட காலங்களில் பல நூறு கோடிக்கு அதிகமான சொத்துக்கள் தற்போது அவர் வசம் உள்ளது.இந்த சொத்துக்களை அவர் எப்படி பெற்றுக் கொண்டார் என்பது தொடர்பான விபரங்களை அவர் தெரியப்படுத்த வேண்டும்.

பஷீர் முறைகேடான முறையில் சொத்துக்களை ; சேர்த்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டியது நல்லாட்சியின் கடமையாகும்.

தகவல் அறியும் சட்ட விதிகளுக்கு அமைவாக ; குறிப்பிட்ட திணைக்களங்கள் உடனடியாக பஷீர் சேகுதாவூத்தின் சொத்துக்களை விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.என மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஷீர் சேகுதாவூத்திற்கு கப்பல் ஒன்றும் உள்ளதாகவும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -