ஜனாதிபதிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்.!

1804 ஜுன் 07ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தினால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் 7 பேருக்கும் மேலதிகமாக அந்த வர்த்மானி அறிவித்தலில் உள்ளடங்கியுள்ள ஏனைய 183 பேரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

1804ஆம் ஆண்டு ஜுன் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுடன், அவர்களுடைய பெயர் விபரங்களையும் உள்ளடக்கி ஜனாதிபதிக்கு இன்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ பகுதியில் பிரித்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த சிங்களத் தலைவர்கள் 19 பேர் நாட்டின் தேசிய வீரர்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார். இந்நிலையில், பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம்களையும் நாட்டுக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதிக்கு கடந்த ஜனவரி 24ஆம் திகதி கடிதம் அனுப்பி வைத்திருந்தார். 

இக்கோரிக்கை ஏற்று ஜனாதிபதி அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாசவுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். விரைவில் அவர்களது பெயர் பட்டியல் தேசிய வீரர்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட ஏனைய 183 பேரையும் தேசிய வீரர்களாக அறிவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்குமாறு சிவில் அமைப்புக்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கமைய, 1804 ஆம் ஆண்டு ஜுன் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேடி எடுத்து அதில் உள்ளடங்கியுள்ள அனைவரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -