ஒரு அரசியல் வாதி விடும் தவறுகள்தான் அந்த சமூகத்தின் தலைவிதியையே மாற்றும்..!

சில பேர் கூறுகின்றார்கள் மரணித்தவருடைய நண்மைகளைத்தான் கூறவேண்டுமே தவிர, அவர்செய்த பிழைகளைப்பற்றி விமர்சிக்க கூடாது என்று கூறுகின்றனர். அது உண்மைதான் விமர்சிக்கப்படுகின்றவர் தனிமனிதனாக இருந்தால் அவர்கள் கூறுவதில் நியாயமிருக்கலாம், அதுவல்லாமல் அவர் ஒரு அரசியல் வாதியாகவோ, பொது மக்களின் வழிகாட்டியாகவோ இருந்து, சமூகம் சார்ந்த விடயங்களில் அவர் நல்லது செய்தாலோ, அல்லது பிழைகள் செய்தாலோ, அவர் மரணித்து விட்டார் என்பதற்காக அதனை சுட்டிக்காட்டாமல் விடுவதென்பது ஏற்புடைய விடம் அல்ல.

பொதுவாக அரசியல் வாழ்க்கையில் சமூகம் சார்ந்த விடயங்களில் ஒருவர் எவ்வளவுதான் நல்லது செய்தாலும், அவர் விடும் ஒருசில பிழைகள்தான் அந்த சமூகத்தின் வரலாற்றையே கேள்விக் குறியாக மாற்றிவிட்ட விடயங்களை வரலாறுகளில் நாம் காணலாம்.

அப்படியான வரலாற்று தவறுகளை நாம் சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினால், பின்னால் வரும் மற்ற சமூகத்தலைவர்கள் அதனைக் கண்டு திருந்திக் கொள்வதற்கும், மக்கள் விழிப்பாக இருக்கின்றார்கள் ஆகவே நாமும் கவணமாக நடக்கவேண்டும் என்ற அச்சமும் அந்த தலைவர்களுக்கு ஏற்படும்.

ஒரு பரீட்சைக்கு தோற்றும் மாணவன் ஒரு புள்ளிகளினால் தோற்றுவிடுவதும், ஒரு தரமான போர்வீரன் ஒருநொடியில் விடும் தவரினால் அவன் தலை உருளுவதும், ஒரு ஓட்டப்பந்தைய வீரன் ஒரு நொடியில் தனது பதக்கத்தை தவறவிடுவதும், ஒரு தரமான சாரதி ஒரு நொடியில் விடும் தவறினால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதும், எப்படி ஈடுசெய்ய முடியாத விடயங்கள் என்பது போலவே, ஒரு அரசியல் வாதி தக்க நேரத்தில் விடும் தவறுகள்தான் அந்த சமூகத்தின் தலைவிதியையே மாற்றும் என்பதையும் நாம் கவணிக்க தவறிவிடுகின்றோம்.

அந்த தவறுகளை விடயம் தெறிந்தவர்கள் சுட்டிக்காட்டினால் அதனை சிலபேர் விரும்புவது கிடையாது, காரணம் தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட, அவர் செய்த நல்லவற்றையே பேசவேண்டும் என்று கூறுகின்றனர், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தால் அந்த வாதம் சரியானதாக இருந்தாலும், பொது வாழ்க்கை சம்பந்தபட்ட விடயத்தில் அந்த வாதம் பிழையானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆகவே, நமது தமிழ் அரசியல் வாதிகளானாலும், முஸ்லிம் அரசியல் வாதிகளினாலும், சிங்கள அரசியல் வாதிகளினாலும் விடப்பட்ட பிழைகள்தான் இன்று இந்த நாட்டையும், அவர்கள் சார்ந்த சமூகத்தையும் பாதித்துக் கொண்டு வருகின்றது என்பதை பல ஆதாரங்களோடு நாங்கள் தொடர்ந்து எழுத என்னியுள்ளோம். அந்த நேரம் தாங்கள் விரும்பும் அரசியல் தலைவரை இப்படி குற்றம் பிடித்து எழுதுகின்றார்களே என்று கவலைபடுவதை விட்டுவிட்டு, அதில் உள்ள உண்மைத்தண்மைகளை நாம் நடுநிலையாக சிந்தித்து, அது சரியாக பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதும், அது பிழையாக பட்டால் அதற்கு தக்க ஆதாரத்தோடு பதில் தருவதுமே சிறப்பாக அமையும் விடயம் எனலாம்.

ஒரு பாணைச் சோற்றுக்குள் ஒரு துளி விசம் கலந்தால் என்ன நடக்கும் என்பதை போலவேதான், அவர்கள் விடும் சிறு தவறும் எம் சமூகத்தை எப்படி பாதித்துள்ளன என்ற விடயங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுவோம்... அந்த நேரம் தாங்கள் நேசிக்கின்ற தலைவரை குற்றம் பிடித்து எழுதுகின்றார்களே என்று என்னுவதை விட, இந்த தவறுகளை மற்றவர்களும் விடக்கூடாது என்று நாம் தட்டிக்கேட்டு பேசுவதற்கு முன்வந்தால், எந்த சமூகமாக இருந்தாலும் அந்த சமூகம் தலைநிமிர்ந்து வாழும் என்பதில் எந்தவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

அந்த தலைவர்களை அளவுக்கு மிஞ்சி நாம் நேசிப்பதால் அவர்கள் விட்ட தவறுகளை சிறு தவறுதானே என்று விட்டுவிட்டால் அது நமது சமூகத்துக்கு செய்யும் பெரிய துரோகமாக முடியும், அதற்காக அந்த தலைவர்கள் செய்யாத விடயங்களை செய்ததாக பொய் கூறுவதும், எழுதுவதும் அதைவிட துரோகமாகும்.

ஒரு அரசியல்வாதி நமக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் மக்களிடம் ஆணைகேட்கின்றார், அதற்குத்தான் மக்களும் ஆணைவழங்குகின்றார்கள். அந்த ஆணையை பெற்றவர் நமக்கு கடமைசெய்யவேண்டும் என்பதுதான் அவரது கடமையாகும், அதனை நாம் புகழ்வது கடமையில்லாது விட்டாலும், அவர்கள் விடும் தவறுகளை கட்டாயம் நாம் தட்டிக்கேட்டே ஆகவேண்டும், ஏனென்றால் அவர்கள் மக்களின் ஆணையை பெற்றது நல்லது செய்வதற்குத்தானே தவிர, மாறாக தவறு செய்வதற்கு அல்ல என்பதை நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே, நல்லவிடயங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, பிழையான விடயங்களில்தான் பிரச்சினைகளே ஆரம்பிக்கின்றன, அதன் காரணமாக பல இன்னல்களையும், உயிர் இழப்புக்களையும் இன்றும் நமது நாடு சந்தித்துக்கொண்டு வருகின்றது எனலாம். அதனால் அவர்கள் விட்ட பிழைகள் என்னவென்று கண்டுபிடித்து விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எங்கள் கருத்தாகும்.

அது நாட்டுக்கும், சமூகத்துக்கும் நல்லதாகவே அமையும் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் இப்போதுள்ள அரசியல் வாதிகளையும் புடம் போடுவதற்கு ஏதுவாக அமையும் எனலாம்.

எம்.எச்.எம்.இப்ராஹிம்.
கல்முனை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -