மஹிந்தவை கொல்ல திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட மூன்று ஊடகவியலாளர்கள் இன்று விடுதலை.!

2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட, மூன்று ஊடகவியலாளர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்களான தயா வெத்தசிங்க, ரவீந்தர புஸ்பகுமார மற்றும் சாலித விமலசேன ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்ப்ட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினரான துஷித ரணவக்கவுக்கு சொந்தமான தெனியாய - நாதகல பகுதி வீட்டுக்காக, மஹநெகும திட்டத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டதாக, கூறப்படும் செய்திக்காக, புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சேகரித்து வந்து கொண்டிருந்த வேளை இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.

அப்போது அரச ஊடகங்களில் "ஜனாதிபதியை கொல்ல முயன்ற சதி தொடர்பிலான சந்தேகநபர்கள்" என அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள், பின்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவர் மீதும், தனியார் காணியில் அத்துமீறி நுழைய முற்பட்டமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

எது எவ்வாறு இருப்பினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்று, இந்த வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதற்கமை, குறித்த மூன்று ஊடகவியலாளர்களும் போதிய சாட்சிகள் இன்மையாளும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாமையினாலும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -