நாளை கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும்.!

காரைதீவு நிருபர் சகா-
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கெதிராக நாளை கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

அதன்காரணமாக நாளை கிழக்குமாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடையுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டு.தலைவர் வைத்தியகலாநிதி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கர் தெரிவித்தார்.
பாரிய வைத்தியசாலைகளில் அவசர அவசிய சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்.ஏனைய செயற்பாடுகள் யாவும் ஸ்தம்பிக்கும்.

அம்பாறை பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கவுள்ள வைத்தியர்கள் கலந்துகொள்ளும் பேரணி ஊர்வலமாகச்சென்று அம்பாறை நகர மண்டபத்தை அடையும். அங்கு பாரிய பொதுக்கூட்டமொன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வைத்தியர்களும் குதிக்கவுள்ள இப்போராட்டத்திற்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சகல மாணவர்கள் மற்றும் கிழக்கு வைத்தியபீட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என பலதரப்பட்டவர்கள்; கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -