சமூர்த்தி நிவாரணம் கோரி சம்பூர் மக்கள் கவனஈர்ப்பு பேரணி

 கீத் திருகோணமலை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்ந்த காரணத்தால் பல வருடங்களாக சமூர்த்தி நிவாரணம் நிராகரிக்கப்பட்ட மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனஈர்ப்பு அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.மூதூர் பிரதேசத்தில் சம்பூர் கிழக்கு-மேற்கு,கட்டபறிச்சான் தெற்கு- வடக்கு, அம்மன்நகர்,கனேசபுரம்,சாலையூர்,சந்தோசபுரம்,கடற்கரைச்சேனை,சேனையூர்,நவரட்னபுரம், பாட்டாளிபுரம்,நல்லுர் ஆகிய கிராமபிரிவு பிரதேசங்களைச்சேர்ந்த சுமார் 4900 பேர்களுக்கு சமூத்தி நிவாரணத்தை பெற்றுத்தருமாறு கோரி இன்று காலை8.00 மணிக்கு சம்பூர் நாவலடிச்சந்தியில் இருந்து பேரணியாக சென்று மூதூர் பிரதேச செயலகத் சென்றடைந்தனர்.

அங்கு வைத்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளர் திரு.யூசுப்பிடம் கையளித்து அதனை அவருடாக சமூர்த்தி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவிற்கு அனுப்பி வைக்குமாரு கோரிக்கை விடுத்தனர் 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -