முஸ்லிம் அரசியல் கேலிக் கூத்தாகிக் கொண்டு செல்கின்றது..!

சம்சுல் ஏ றசீட்-
ன்றைய அரசியல் எமது சமூகத்திற்கான குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உள்வீட்டுப் பூசல்களின் ஊடாக தேசிய அரங்கில் நாளுக்கு நாள் கேலிக் கூத்தாகிக் கொண்டு செல்கின்றது. குறிப்பாக எந்தவோர் அரசியல் கட்சியை எடுத்து நோக்குவோமானால் யாப்பை மையமாகக் கொண்டே கட்சிகளானது இயங்கிக் கொண்டு வருகின்றது. ஆனால் அவ்யாப்புக்கள் எதற்காக அவ் யாப்புக்கள் சமூகத்திற்கு எவ்வாறு குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளது என்பதை மறந்து வெற்று ஆவணமாகவே இருக்கின்றதேயன்றி செயல் உருவத்தில் இல்லை. 

அரசியல் யாப்பை இந்த காலத்தில் பேசுகின்றோம் காரணம் அதுவும் எம் உட்கட்சிப்பூசலிலாலேயே பேசுகின்றோம். அரசியல் யாப்பு என்றால் என்று என்று விளங்கி வைத்திருக்கிறோமா ???

அரசொன்றின் அரசாங்கத்தின் அமைப்பு, அதிகாரம், தொழிற்பாடு ஆகியவற்றையும் அவ்வரசின் எல்லைக்குட்பட்ட மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் அம்மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளைத் தெளிவாக விளக்கும் விதிகளின் தொகுப்பே அரசியல் யாப்பாகும். 

இன்று தேசிய அரசியல் அரங்கில் முஸ்லிம் சமூகத்திற்கு தெரியாமல் பல்வேறு விடயங்கள் முஸ்லிம் அரசியலில் பேரின அரசியல் சக்திகளின் ஊடாக உட்புக எத்தணித்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால் எமது பிரதிநிதிகள் தங்களின் உட்கட்சிப் பூசலினைப் பெரிதாக்கி கொண்டு எமது சமூகந் தொடர்புபான பிரச்சினைகளுக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்று கூடத் தெரியாத நிலைமையில் எமது சமூகந் தள்ளப்பட்டுவிட்டது .

எமது முஸ்லிம் கட்சிகளால் எமக்கு காட்டப்படுவது அரசியல் அல்ல மாறாக முஸ்லிம் சமூகத்தை அரசியலில் கேலிக் கூத்துப் பொருளாக வைத்து அதன் பார்வையாளராக எம்மையே வைத்து எம்மையும் எமது சமூகத்தையும் மயக்திலெயெ வைத்திருக்கின்றனர். 

முஸ்லிம் கட்சிப் பிரச்சினைகள் ஒன்றும் எமது தேசிய அரசியல் அரங்கில் எமது சமூகத்திற்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தராது. தற்போது எமது தேசிய அரசியலில் சலசலப்பாக உள்ள விடயம் யாப்புத் திருத்தம் அதிலும் விசேடமாக தேர்தல் மாற்றங்கள் . 

இந்தத் தேர்தல் மாற்றம் தொடர்பாக எமது சமூகம் பூரணத் தெளிவில் இருக்கின்றதா எனப் பார்த்தால் பூச்சியமே. அதனைச் செய்ய வேண்டியது எமது சிறுபான்மைக் கட்சியையன்றி வேறு யார். எமது சமூகம் இவ்வாறான திருத்தங்கள் பேரின அரசியல் சக்திகளினால் அவர்களின் தேவைக்கேற்ப தேர்தல் முறைமைகள் மாற்றப்பட்டால் எமது சமூகந்தான் நொந்து கொள்ள வேண்டும். 

இனியும் இவ்வாறான உட்கட்சிப் பூசலை மறைத்துவிட்டு சமூகந் தொடர்பான பிரச்சினைகளுக்கு தெளிவாகத் தீர்வுகளை கண்டு கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -