அபு அலா -
சுகாதாரத்துறையை முன்னெற்றுவதே எனது நோக்கமாகும். இத்துறையை முன்னெற்றுவதன் மூலம் எமது மக்களும், எமது நாடும் சிறந்ததொரு வளமிக்க நாடாக சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலைக்கான உடற்பயிற்சிப் பிரிவு,எண்டஸ்கோப் பிரிவு,சீ.எஸ்.எஸ்.டி பிரிவு, மருத்துவ ஆய்வுகூடம் போன்ற பிரிவுகளை கையளிக்கும் நிகழ்வுடன் இந்த பிரிவுகளுக்கு 20 மில்லியன் ரூபா நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (18) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை அபிவித்தி செய்யும் நோக்கில் பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றேன். அதற்கான சகல உதவிகளையும் எமது நல்லாட்சி அரசு வழங்கி வருகின்றது. அந்த வகையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பின்தங்கிக் காணப்படும் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களுக்கான விடுதிகள், உடற்பயிற்சிப் பிரிவு,எண்டஸ்கோப் பிரிவு,சீ.எஸ்.எஸ்.டி பிரிவு,பற்சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்துப் பிரிவு, மருத்துவ ஆயுவு கூடம், வைத்தியசாலையில் நோயர்கள் தங்கி சிகிச்சை பெறும் விடுதிகள் போன்ற பல வசதிகளை பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து இந்த வசதிகளை செய்து வருகின்றேன்.
அதுமாத்தரிமல்லாமல், இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டு புர்த்திசெய்யப்பட்ட கட்டிடங்களுக்கான சகல மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகின்றோம். எமது நாடும், எமது மக்களும் சிறந்தொரு தேக ஆரோக்கியமுள்ளவர்களாகவும், சிறந்ததொரு வளமுள்ள நாடாகவும் திகழவேண்டும் என்ற ஒரே நோக்கமாகும். அதற்காக பல பில்லியன் ரூபாய்களை எமது அரசு செலவு செய்தும், செய்யவும் தயாரகவுள்ளது என்பதை நான் கூறிக்கொள்வதில் பெறுமிதமடைகின்றேன் என்றார்.